Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நக்கலடித்த வல்லுநர்கள்! விளாசி தள்ளிய ஓலா! ஒரே ஆண்டில் டாப் இடம்! டிவிஎஸ், ஹீரோ எல்லாம் பின்னால்தான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இப்போது டூவீலர் சந்தையில் மின்சார வாகனங்கள் மெல்ல ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில், மற்ற நிறுவனங்களை அடித்து நொறுக்கிவிட்டு ஓலா நிறுவனம் டாப் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் மாற்றுவழிகள் குறித்து யோசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்போது வாகனம் வாங்கும் பலரும் மின்சார வாகனத்தையும் ஒரு ஆப்ஷனாகவே வைத்துள்ளனர். விலை சற்று அதிகம் என்றாலும் கூட.. பெட்ரோல் போட்டே காசை செலவு செய்யத் தேவையில்லை என்பதால் மின்சார வாகனத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் கடந்தாண்டு அதிரடியாக நுழைந்தது. அப்போது S1 மற்றும் S1 Pro என்று இரண்டு வகையான ஸ்கூட்டர்களை அவர்கள் அறிமுகப்படுத்தினர். டெக் நிறுவனமான ஓலா, மின்சார வாகனங்கள் துறைக்கு வந்ததைப் பலரும் விமர்சித்தனர். ஓலாவால் சிறப்பான வாகனத்தைக் கொடுக்க முடியாது என்றும் இதில் நிச்சயம் தோல்வியடையவே போகிறார்கள் என்றார்கள். விமர்சனத்திற்கு ஏற்ப, ஓலாவால் திட்டமிட்டபடி வாகனங்களை டெலவரி செய்ய முடியவில்லை.

 டாப் கியர் வளர்ச்சி

டாப் கியர் வளர்ச்சி

ஆனால், தொடக்கத்தில் இருந்த சிக்கலை ஓலா நிறுவனம் விரைவிலேயே அடையாளம் கண்டு சரி செய்துவிட்டது. ஓலா டெலவரி தொடங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சி எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை தொடர்ந்து வளர்ச்சியடைந்தே வருகிறது. கடந்த அக். மாதம் நாடு முழுக்க ஸ்கூட்டர் விற்பனை 75 ஆயிரத்தைத் தாண்டியது. நவம்பரில் மட்டும் 76,598 ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், டிச. மாதம் சற்று குறைந்து 76,162 ஸ்கூட்டர்கள் விற்பனையானது.

 எத்தனை ஸ்கூட்டர்கள்

எத்தனை ஸ்கூட்டர்கள்

நிறுவனங்கள் அடிப்படையில் பார்த்தால் ஓலா தான் தொடர்ந்து டாப் இடத்தில் உள்ளது. அந்த நிறுவனம் இப்போது எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ என இரண்டு ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. இதில் டிசம்பர் மாதம் மட்டும் ஓலா 17,279 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. தொடர்ச்சியாக 3 மாதங்கள் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்களை விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெயரையும் ஓலா பெற்றுள்ளது. மின்சார இரு சக்கர வாகனச் சந்தையில் ஓலா நிறுவனம் சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதாகவும் இப்போது மின்சார டூவீலர் சந்தையில் 30 சதவிகிதத்தை ஓலா பிடித்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கை

நம்பிக்கை

இது குறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில், " 2022ஆம் ஆண்டு, மின்சார வாகனச் சந்தை மிகச் சிறப்பாக இருந்தது.. சர்வதேச அளவில் மின்சார வாகனச் சந்தையாக இந்தியா மாற வாய்ப்புகள் ரொம்பவே அதிகம். 2022 நமக்கு அதைத் தான் காட்டுகிறது. வரும் ஆண்டுகளிலும் இதே வளர்ச்சி தொடரும் என்றே எதிர்பார்க்கிறோம்" என்றார். ஓலா நிறுவனம் இப்போது இரண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இது மட்டுமின்றி குறைந்த விலையில் மற்றொரு மாடலுக்கான புக்கிங்கையும் அவர்கள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 எல்லாம் பின்னால் தான்

எல்லாம் பின்னால் தான்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகன பட்டியலில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. டிசம்பர் 2022இல் 9,317 டூவிலர்களை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. ஒரு மாதத்தில் டிவிஎஸ் விற்பனை செய்த அதிகபட்ச ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை இதுவாகும். iQubeபிராண்டின் கீழ் டிவிஎஸ் தனது மின்சார டூவிலர்கள் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 2021 டிசம்பரில் 1,212 ஸ்கூட்டர்களை டிவிஎஸ் விற்றிருந்த நிலையில், கடந்த டிசம்பரில் அது 11,071 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

இந்தப் பட்டியலில் 8091 ஸ்கூட்டர்களுடன் ஹீரோ எலக்ட்ரிக் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஏதர் எனர்ஜி 7,646 ஸ்கூட்டர்களை டெலிவரி செய்து 4வது இடத்தில் உள்ளது. கடந்த 2021 டிசம்பருடன் ஒப்பிடுகையில் சுமார் 389% வளர்ச்சியடைந்துள்ளதாக ஏதர் தெரிவித்துள்ளது. ஒகினாவா ஆட்டோடெக் மற்றும் க்ரீவ்ஸ் துணை நிறுவனமான ஆம்பியர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன ஒகினாவா 5,279 ஸ்கூட்டர்களையும் ​​ஆம்பியர் 4,408 ஸ்கூட்டர்களையும் விற்றுள்ளது.

 போட்டு தாக்கும் ஓலா

போட்டு தாக்கும் ஓலா

ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டில் மின்சார டூவீலர் புதியதொரு மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2021இல் 1.5 லட்சம் மின்சார டூவிலர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் ஓலா தான் டாப் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் 1,09,252 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. ஒகினாவா 1,01,682 யூனிட்களையும், ஹீரோ எலக்ட்ரிக் 100,123 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளது. ஆம்பியர் 79,855 யூனிட்கள் விற்பனையாகி நான்காவது இடத்தில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+