டெல்லியில் பற்றி எரிந்த புகழ்பெற்ற மார்க்கெட்! பதறிய மக்கள்! களமிறக்கப்பட்ட 39 தீயணைப்பு வாகனங்கள்!
டெல்லி: டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கப்பார் மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 39 வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
டெல்லியில் சமீப காலமாக அடிக்கடி தீவிபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சேர்ந்து தீத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் டெல்லியில் முக்கிய இடமாக கரோல் பாக்கில் உள்ள கப்பார் மார்க்கெட்டில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இது அங்குள்ள அடுத்தடுத்த கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பதறினர். இதுபற்றி அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பாதை குறுகலாக இருந்ததால் தீயணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் தீயின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 39 வாகனங்கள் சேர்ந்து போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீயில் மொத்தம் 16க்கும் அதிகமான கடைகள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தீயணைப்புத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நேற்று டெல்லி ரோஹினி பகுதியில் மருத்துவமனையின் ஐசியூவில் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது ஆக்சிஜன் சப்ளை தடைப்பட்டதால் 64 வயது நோயாளி ஒருவர் இறந்ததார். அதற்கு முன்பு கடந்த மாதம் டெல்லி முன்ட்கா மெட்ரோரயில் நிலையம் அருகே 4 மாடி வணிக வளாகத்தில் தீவிபத்து ஏறபட்டது. இதில் 27 பேர் இறந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications