தெரியாத நம்பர்.. பொண்ணு வீடியோ கால் பண்ணுதா.. தொட்டீங்க, கெட்டீங்க! எப்படி எஸ்கேப் ஆகலாம் தெரியுமா?
டெல்லி: செல்போன்களுக்கு தெரியாத எண்ணிலிருந்து வீடியோ கால் வந்தால் என்ன செய்வது என்பது குறித்தும் அதை எப்படி தவிர்ப்பது என்பது குறித்தும் பார்ப்போம்.
அடித்து பிடுங்குவது, கொள்ளை அடிப்பது, திருடுவது, என்ற முறையில் மோசடிகள் இருந்து வந்தது. இதையடுத்து தொழில்நுட்பங்கள் மாற மாற திருட்டுகளிலும் புதுமைகள் புகுத்தப்பட்டு ஹைடெக்காக திருட்டுகள் நடந்தன. வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக பணத்தை திருடுவது, ஏடிஎம் கார்டு எண்ணை கேட்டு போலி கார்டு மூலம் பணம் திருடுவது என்ற காலம் போய் தற்போது நூதன திருட்டு நடைபெறுகிறது.
அதாவது யாராவது ஆணுக்கு மோசடி கும்பலை சேர்ந்த பெண்கள் வீடியோ கால் செய்கிறார்கள். அப்போது யாரென தெரியாமல் அந்த காலை அந்த ஆண் எடுத்துவிட்டால் உடனே ரெக்கார்டிங் ஸ்டார்ட் ஆகிவிடும். எதிர்முனையில் இருக்கும் பெண் நிர்வாணமாக நிற்பார். இது என்னவென புரிந்து சுதாரிப்பதற்குள் வீடியோ ரெக்கார்டு ஆகி நமக்கு மிரட்டல் கால்கள் வரும்.

மோசடி கும்பல்
இதே போல் ஆணும் ஆணும் போன் செய்து கொள்கிறார்கள். திடீரென மோசடி கும்பல் எதிர்முனையில் பேசுவோரை நிர்வாணமாக நிற்க சொல்லும், அவரும் நிர்வாணமாக நின்றால் உடனே அதுவும் ரெக்கார்டு ஆகி பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்படும். இது போல் தவறே செய்யாமல் பணத்தை இழந்தவர்கள் ஏராளம்.

நூதன மோசடி
இது போன்ற நூதன மோசடிகளை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். உங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் யாராவது தொடர்பு கொண்டு சாட் செய்வார்கள். அதில் டிபியை பார்த்தால் ஆபாசமாக அழகாக ஒரு பெண் இருப்பது போல் தோன்றும். நீங்கள் அந்த பெண் யாரென்று தெரிந்துகொள்வதற்குள்ளாகவே உங்களுக்கு வீடியோ கால் அழைப்பு வரும்.

ஆர்வத் தூண்டுதல்
அந்த நபர் யார் என்ற ஆர்வத்தின் தூண்டுதலால் அந்த வீடியோ காலை உடனே ஆன் செய்துவிடுவீர்கள். அப்போது மறுமுனையில் ஒரு பெண் இருப்பார். என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்கு முன்பாக அந்த பெண் தனது ஆடைகளை களைய தொடங்குவார். இடையிடையே ஆபாச சைகைகளையும் தருவார். அய்யய்யோ ஏதோ வில்லங்கம் என நினைத்து நீங்கள் அந்த வீடியோ காலை கட் செய்யலாம். ஆனால் அது ரொம்ப தாமதம்.

வீடியோ பதிவு
ஏனென்றால் நீங்கள் அந்த பெண்ணை பார்ப்பது, அவர் ஆடையை அவிழ்ப்பதை பார்ப்பது, ஆபாச சைகைகளை பார்ப்பது உள்ளிட்டவற்றை அந்த பெண் ரெக்கார்ட்டிங் செய்து விடுவார். அப்பாடா என நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அந்த எண்ணிலிருந்து உங்களுக்கு ரெக்கார்டு செய்யப்பட்ட வீடியோ வரும். பணம் கொடுக்காவிட்டால் உங்கள் போனில் உள்ள அனைவருக்கும் இந்த வீடியோவை அனுப்பிவிடுவேன் என மிரட்டுவார்கள்.

கவுரவத்தை காக்க
உடனே தங்கள் குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்ற அவர்கள் கேட்கும் பணத்தை கொடுப்பார். இது மோசடியாக எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அவர் போனில் இருக்கும் நபர்களிடம் விவரிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாக தெரியும். இதனால் அவர் காசு கொடுத்துவிடுவார். ஆனால் இது போல் ஒரு கால் வந்தால் என்ன செய்வது என்பது குறித்து ஆயுர்வேதா மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வீடியோ கால் மோசடியை தடுக்க
அவர் கூறுகையில் எனக்கும் இது போன்று வீடியோ கால் வந்தது. நான் என்னை எப்படி தற்காத்துக் கொண்டேன் என்றால், நான் எதிராளிக்கு தெரியாத மாதிரி front cameraவை என் விரலால் மறைத்துக் கொண்டேன். நான் உஷாரானதை சுதாரித்த அந்த பெண் அவரும் உஷாராகி வீடியோ கால் இணைப்பை துண்டித்துவிட்டார். இது போன்ற மோசடி குறித்து எனக்கு ஒருவர் சொன்னதால்தான் நான் இந்த மோசடியில் சிக்கவில்லை. இந்த தகவலை நீங்கள் அனைவருக்கும் பகிருங்கள். அது யாருக்காவது உதவும், புண்ணியமாக போகும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications