ஏறுது.. இறங்குது.. இந்தியாவில் இன்று சற்று குறைந்த கொரோனா பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 20,044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் 4.80 என்ற அளவில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டின் துவக்கத்தில் கொரோனா பரவ துவங்கியது. அதன்பிறகு ஊரடங்கு அமலானது. தற்போது வரை கொரோனா 3 அலைகளாக பொதுமக்களை தாக்கியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில காலமாக குறைந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. தமிழகம் உள்பட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது.

மத்திய அரசு விபரம்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநில கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசின் சுகாதாரத்துறை தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று காலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய விபரங்கள் வருமாறு:

நேற்றை விட குறைவு
அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் மொத்தம் 20,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை உறுதி செய்யும் சதவீதம் என்பது 4.80 என்ற அளவில் உள்ளது. நேற்று 20,139 பேருக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் இது சற்று குறைந்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 16,906 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். இதை ஒப்பிடும்போது இன்றைய பாதிப்பு அதிகமாகும். மேலும் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனாவில் இருந்து 18,301 பேர் குணமாகி உள்ளனர். அதேநேரத்தில் 56 பேர் பலியாகி உள்ளனர்.

மொத்த பாதிப்பு எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 1, 40, 760 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். வீட்டு தனிமையில் உள்ளவர்களும் இதில் அடங்குவர். மேலும் மொத்தம் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 7 ஆயிரத்து 033 ஆக உள்ளது. இதில் 4 கோடியே 30 லட்சத்து 63 ஆயிரத்து 651 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 5 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி தான் ஆயுதம்
இந்தியாவில் தற்போது கொரோனா மரபணு மாறி பரவி வருகிறது. இதுதான் சமீபத்திய கொரோனா பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்து கொள்ள தடுப்பூசி தான் சிறந்த ஆயுதமாக மத்திய அரசு, மாநில அரசு கூறி வருகிறது. ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செப்டம்பர் மாதம் 28 ம் தேதி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications