சிறைபிடிக்கப்பட்ட சீன ராணுவ வீரர்கள்.. அருணாச்சலில் அத்துமீறியதால் இந்தியா கொடுத்த செம்ம பதிலடி
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இந்திய எல்லைக்குள் சீன படையினர் 200 பேர் அத்துமீறி உள்ளே வந்ததாகவும், இந்திய ராணுவத்தால் சில சீன ராணுவ துருப்புகள் சில மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டதாகவும், அவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video
இந்தியா சீனா இடையே உத்தரகாண்ட், காஷ்மீர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எல்லை பிரச்சனை உள்ளது. எல்லை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை சில இடங்களில் சீனா ஏற்பது இல்லை. குறிப்பாக அருணச்சால பிரதேசம் மற்றும் லடாக்கில் கடும் மோதல் போக்கை சீனா கடைபிடித்து வருகிறது.
அதன் எதிரொலியாகவே கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீன படைகள் எல்லையில் அத்துமீறி ஆத்திரமூட்டும் செயல்களை செய்ததால் கைகலப்பு ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் பல வீரர்கள் இறந்தனர் என்றாலும் இதுபற்றி சீனா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்போது இருதரப்புக்கும் இடையே போர் மூளும் அபாயமும் ஏற்பட்டது.

அத்துமீறல்
இரு தரப்பும் படைகளை குவித்தன. அதன்பிறகு ராணுவ மட்டத்தில் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இரு நாட்டு படைகளுமே சர்ச்சைக்குரிய பகுதிகளில் படைகளை விலக்கி கொண்டன. இந்நிலையில் அண்மையில் உத்தரகாண்டில் ஏராளமான சீன ராணுவத்தினர் அத்துமீறி உள்ளே வந்ததாகவும், அவர்கள் சில மணி நேரம் அங்கிருந்துவிட்டு பின்னர் தங்கள் எல்லைப்பகுதிக்கு சென்றதாகவும் செய்திகள் வெளியாகின. இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எல்லையில் அவ்வப்போது சீனா அத்துமீறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது. லடாக் தொடங்கி, அருணாச்சல பிரதேசம் வரை இந்தியா சீன எல்லையில் தீவிரமாக கண்காணித்து வருகிறது,

அருணாச்சல பிரதேசம்
இந்த சூழலில், அண்மையில் திபெத்தில் இருந்து சுமார் 200 சீன ராணுவ வீரர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்து, ஆளில்லா பதுங்கு குழிகளை சேதப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன வீரர்கள் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் இந்திய வீரர்களால் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் நியூஸ் 18க்கு தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு
இந்த சம்பவம் கடந்த வாரம் பம் லா மற்றும் யாங்சேவின் எல்லைப் பாதைக்கு இடையே, உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுக்கு (LAC) அருகில் நடந்துள்ளது. அரசு வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின் படி, lAC இன் இந்தியப் பகுதியில் சீனப்படை ரோந்து பணியின் போது அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்தியப் படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கருத்து இல்லை
அப்போது ஒரு சில சீன வீரர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டனர் என்று சொல்லப்படுகிறது. உள்ளூர் இராணுவ காமாண்டர்கள் மட்டத்தில் இந்த விவகாரம் பின்னர் பேசித் தீர்க்கப்பட்டது. சீன வீரர்கள் விடுவிக்கப்பட்டனர் . நிலைமை சீரானது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறின. எனினும் இந்த சம்பவம் குறித்து ராணுவத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை வரையறை
"இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படவில்லை. எனவே, நாடுகளுக்கிடையே LAC பற்றிய கருத்து வேறுபாடு அதிகமாக உள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலமே இங்கு கருத்து வேறுபாடுகளை மறந்து அமைதி ஏற்படுவது சாத்தியமாகும்" என்கிறார்கள். இரு தரப்பினரும் தங்கள் எல்லையில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இப்பகுதியில் சீன ஆக்கிரமிப்பு புதியதல்ல. 2016 ஆம் ஆண்டில், 200 க்கும் மேற்பட்ட சீன துருப்புக்கள் யாங்சேவில் உள்ள எல்ஏசியின் இந்தியப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் சில மணிநேரங்களில் திரும்பிச் சென்றது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications