டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 8834 பேர் மீண்டனர் - 98416 பேருக்கு சிகிச்சை

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 8834 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,69,608 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 98416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,46,81,561 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 ஆம் திருநாள்: அலங்காரமாக எழுந்தருளிய நம்பெருமாளுக்கு அரையர் சேவை

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 211 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 98416 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறையும் பாதிப்பு

குறையும் பாதிப்பு

கடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 1.5 சதவிகிதம், மகாராஷ்டிராவில் 15 சதவிகிதம், தமிழ்நாட்டில் 2.8 சதவிகிதம் உள்பட நாடு முழுவதும் புதிய பாதிப்பு சராசரியாக 3 சதவிகிதம் குறைந்துள்ளது. அதேநேரம் கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் பாதிப்பு 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் மாநிலங்கள்

அதிகரிக்கும் மாநிலங்கள்

கர்நாடகாவில் கடந்த ஒரு வாரத்தில் 2,499 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 2,001 பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல தெலுங்கானாவில் ஒரு வார பாதிப்பு 1,059ல் இருந்து 1,329 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரு வார பாதிப்பு 200ல் இருந்து 492 ஆகவும், குஜராத்தில் 202-ல் இருந்து 309 ஆகவும், உத்தரபிரதேசத்தில் 50-ல் இருந்து 101 ஆகவும் உயர்ந்துள்ளது.

தொற்று அதிகரிக்கும் மாநிலங்கள்

தொற்று அதிகரிக்கும் மாநிலங்கள்

மேலும் கோவாவில் 50 சதவிகிதம், சிக்கிமில் 122 சதவிகிதம், ஜார்க்கண்டில் 12 சதவிகிதம், ஜம்மு காஷ்மீரில் 10 சதவிகிதம் என மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த ஒரு வாரத்தில் புதிய பாதிப்பு சற்று உயர்ந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 4,73,537 பேர் மரணம்

நாடு முழுவதும் 4,73,537 பேர் மரணம்

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 161 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 211 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,73,537 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 98,416 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 44,110 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    64.82 கோடி மாதிரிகள் பரிசோதனை

    64.82 கோடி மாதிரிகள் பரிசோதனை


    நாடு முழுவதும் நேற்று 24,55,911 டோஸ்களும், இதுவரை 127 கோடியே 93 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. நேற்று 8,86,263 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 64.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    English summary
    Nationwide, 8834 people have recovered from corona damage in the last 24 hours. Thus, the number of people recovering from corona in India has increased to 3,40,69,608. Nationwide, 98,416 people are being treated for corona virus infection.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X