இந்தியாவில் 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! அமெரிக்காவை விட பல மடங்கு அதிகம்
டெல்லி: இந்தியாவில் இதுவரை 180 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.2 மடங்கும், பிரான்சை ஒப்பிடும்போது 12.5 மடங்கு அதிகம் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் புள்ளி விவரங்களுடன் கூறினார்.
இந்தியாவில் கொரேனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. தற்போது பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் பிற நாடுகளை காட்டிலும் இந்தியா கொரோனா தடுப்பூசி செலுத்தியது, ஒமிக்ரானை கட்டுப்படுத்தியது ஆகியவற்றில் முன்னணியில் உள்ளதாக மத்திய அரசு பெருமையாக கூறியுள்ளது.

சிறந்த முறையில்...
இதுதொடர்பாக ‛வெபினார்' நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது: பிற நாடுகளை காட்டிலும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை இந்தியா சிறந்த முறையில் கட்டுப்படுத்தி உள்ளது. முந்தைய கொரோனா அலையை காட்டிலும் ஆறுமடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட இந்தியா தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கட்டுப்படுத்தியது. இன்றும் கூட உலகில் 15 முதல் 17 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்தியாவில் சுமார் 3 ஆயிரம் பேர் மட்டும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

மொத்தம் 180 கோடி டோஸ்
இந்தியாவில் இதுவரை மொத்தம் 180 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.2 மடங்கும், பிரான்சை ஒப்பிடும்போது 12.5 மடங்கும் அதிகமாகும். இதில் 81 கோடி பேர் வரை 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 3.9 மடங்கும், பிரான்சை பொறுத்தமட்டில் 15.6 மடங்கும் அதிகமாகும்.

ஆஸ்திரேலியாவுக்கு சமம்
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.74 கோடி பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். இது அமெரிக்காவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது 2.96 மடங்கும், ரஷ்யாவின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது 6.71 மடங்கும் அதிகம். அதிகபட்சமாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மட்டும் 2.50 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாகும்'' என்றார்.

சுகாதார பணியாளர்கள்...
மேலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மான்டவியா கூறுகையில், ‛‛ஒருநாளில் 2.5 கோடி தடுப்பூசி செலுத்துவது என்பது சாதாரண விஷயமல்ல. இது கொரோனாவை கட்டுப்பட்டும் வகையில் தடுப்பூசி நடவடிக்கையை இந்தியா சரியான முறையில் கையாண்டதற்கான திறனை காட்டுகிறது. உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் கூட நாட்டில் தொடர்ச்சியாக சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்'' என பெருமையாக கூறினார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications