நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி.. இனி "இந்த" டைப் நகைகளை வாங்க முடியாது? ஷாக் கொடுத்த மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் எப்போதும் தங்க நகைகள் தான் அதிகம் விற்பனையாகும். தங்கத்தைத் தாண்டி விலையுயர்ந்த உலோகங்களாக இருக்கும் வைரம் மற்றும் பிளாட்டினம் நகை விற்பனை இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கிடையே மத்திய அரசு திடீரென சில வகை நகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் எப்போதும் தங்கத்திற்குத் தனியாக ஒரு மவுசு இருக்கும். இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் ஒவ்வொரு மாதமும் பல டன் தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறோம். விலை ஏறினாலும் கூட தங்க விற்பனை பெரியளவில் குறைவது போலத் தெரியவில்லை.

பிளாட்டினம் கட்டுப்பாடு
தங்கத்தைப் போலவே, அதை விட விலையுயர்ந்த உலோகங்களான வைரம், பிளாட்டினம் நகைகளும் இப்போது இந்தியாவில் கூட விற்கப்படுகிறது. தங்கம் அளவுக்கு அவற்றுக்கு மவுசு இல்லை என்றாலும் கூட ஓரளவுக்கு விற்பனை நடக்கவே செய்கிறது. குறிப்பாக நகர்ப் புறங்களில் இந்த வகை நகைகள் விற்பனை கணிசமாகவே இருக்கிறது. இதற்கிடையே மத்திய அரசு சில வகை பிளாட்டினம் நகைகள் இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பிட்ட வகை பிளாட்டினம் நகைகளுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை DGFT எனப்படும் வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
என்ன மாற்றம்!
அதில் பிளாட்டினம் நகைகளுக்கான இறக்குமதி கொள்கை உடனடியாக மாற்றப்படுவதாகவும் பிளாட்டினம் இறக்குமதி Free என்பதில் இருந்து Restricted என்பதற்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தாண்டு ஏப்ரல் 30ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்ய DGFT-யிடம் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெற்ற நிறுவனங்களால் மட்டுமே இந்த 5.5 மாத காலத்திற்குப் பிளாட்டினம் நகைகளை இறக்குமதி செய்ய முடியும்.
காரணம் என்ன?
இந்தியாவில் இத்தனை காலம் பிளாட்டினம் நகைகளுக்கு எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இருந்தது. இதை சில வர்த்தகர்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். அதாவது 90% தங்கம் அல்லது வெள்ளி மூலம் செய்யப்படும் நகைகளில் சிறு அளவு பிளாட்டினம் இருந்தாலும் கூட அதைப் பிளாட்டினம் நகை எனச் சொல்லி இறக்குமதி செய்துள்ளனர். சுமார் 90% தங்கம் இருந்தும், பிளாட்டினம் நகை என்ற பெயரில் அரசு சலுகை பெறுவது கண்டறியப்பட்டது.
இந்த சிக்கலைச் சரி செய்ய வேண்டும் என இந்திய புல்லியன் மற்றும் ஜூவல்லர்ஸ் சங்கம் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்றே மத்திய அரசு இப்போது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேநேரம் மத்திய அரசு கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்துள்ளது. உரிமம் பெற்ற இந்த நகைகளை இறக்குமதி செய்யலாம். இந்த உத்தரவால் பிளாட்டினம் நகைகளே கிடைக்காது என்பது போல தகவல்கள் பரவுகிறது. அதில் உண்மை இல்லை.
வெள்ளி நகைகள்
முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் இதேபோல வெள்ளி மீதும் மத்திய அரசு தடை விதித்திருந்தது. கடந்த செப்டம்பர் மாதம், தாய்லாந்தில் இருந்து "கற்கள் பதிக்கப்படாத நகைகள்" என்ற பெயரில் வெள்ளி இறக்குமதி அதிகரித்த நிலையில், அதைத் தடுக்க சில வகை வெள்ளி நகைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications