இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர்கள் யார் யார்? டாப் 10 பட்டியல் இதோ! டாப் 5ல் வராத நிதிஷ்!
டெல்லி: பீகார் சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி மூலம் பத்தாவது முறையாக பிகாரின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் நிதிஷ்குமார். 10 முறை முதல்வராக இந்தியாவிலேயே முதலிடத்தில் இருந்தாலும், அதிக காலம் முதல்வராக இருந்தவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் நிதிஷ்குமாருக்கு இடமில்லை. அப்படி என்றால் இந்தியாவில் அதிக காலம் முதல்வராக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து பார்க்கலாம்..
பீகார் சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பத்தாவது முறையாக பிகாரின் முதல்வர் பதவியை ஏற்றுள்ளார் நிதிஷ்குமார். இதுவரை இந்தியாவின் எந்த தலைவரும் இத்தனை முறை முதல்வராக பதவியேற்றதே இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியம்.
ஆனால், அதிக காலம் முதல்வராக இருந்தவர்களின் பட்டியலில் அவர் முதல் ஐந்து இடங்களுக்குள் இல்லை. அப்படியானால் இந்தியாவின் நீண்டகால முதல்வர்கள் யார்? அவர்களின் அரசியல் பயணம் எப்படி? பார்ப்போம்..

1. பவன் குமார் சாம்லிங் - சிக்கிம் (24 ஆண்டுகள், 165 நாட்கள்)
இந்தியாவின் நீண்டகால முதலமைச்சர் என்ற சாதனையை பெற்றவர் பவன் குமார் சாம்லிங். 1994 முதல் 2019 வரை சிக்கிமை வழிநடத்தி, தொடர்ந்து 5 முறை ஆட்சியை தக்கவைத்தார். சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியை தேசிய அளவிலும் அவர் உயர்த்தி காட்டினார்.
2. நவீன் பட்நாயக் - ஒடிசா (24 ஆண்டுகள், 99 நாட்கள்)
ஒடிசாவில் அரசியலின் மாற்றுப்பெயர் நவீன் பட்நாயக். 2000 முதல் 2024 வரை தொடர்ந்து ஆட்சி செய்த அவர், 2024 தேர்தலில் மட்டுமே பாஜக அலைக்கு முன்னால் பின்னடைவை சந்தித்தார். ஓடிசாவில் சுத்தமான ஆட்சி, அமைதியான அரசியல் ஆகியவற்றால் மக்கள் மனதில் தனி இடம் பெற்றவர்.
3. ஜோதி பாசு - மேற்கு வங்கம் (23 ஆண்டுகள், 137 நாட்கள்)
இந்திய அரசியலின் புகழ் பெற்ற மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதி பாசு. 1977 முதல் 2000 வரை முதல்வராக இருந்த அவர், நாடு முழுவதும் இடதுசாரி அரசியலின் அடையாளமாக விளங்கினார். பிரதமர் பதவி கிடைத்த வாய்ப்பையே தானாகவே நிராகரித்தவர் என்ற புகழும் அவருக்குண்டு.
4. கெகாங் அபாங் - அருணாச்சலப் பிரதேசம் (22 ஆண்டுகள், 250 நாட்கள்)
1980-1999 மற்றும் 2003-2007 என இரண்டு நீண்டகால பதவிக்காலங்களுடன் அருணாச்சலத்தின் அரசியலை வடிவமைத்தவர் அபாங். வடகிழக்கின் மிகச் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவர்.
5. லால் தன்ஹாவ்லா - மிசோரம் (22 ஆண்டுகள், 60 நாட்கள்)
மிசோரம் அரசியலில் தடம் பதித்த காங்கிரஸ் தலைவர் தன்ஹாவ்லா, மூன்று காலகட்டங்களில் 22 வருடங்கள் ஆட்சி செய்தார்.
6. வீர்பத்ர சிங் - இமாச்சலப் பிரதேசம் (21 ஆண்டுகள், 13 நாட்கள்)
1983 முதல் 2017 வரை நான்கு முறை ஆட்சியை தக்கவைத்த வீர்பத்ர சிங், இமாச்சலின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்.
7. நிதிஷ் குமார் - பிகார் (20+ ஆண்டுகள்)
பல முறை கூட்டணி மாற்றங்கள், அரசியல் தந்திரங்கள், நல்லாட்சி என்ற அடிப்படையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பிகாரை வழிநடத்தி வரும் நிதிஷ் குமார், பத்தாவது முறையாக பதவியேற்றுள்ளதன் மூலம், இந்தியாவின் நீண்டகால முதல்வர்களின் வரிசையில் 7வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலைத் தொடர்ந்து மாணிக் சர்க்கார் (திரிபுரா), மு.கருணாநிதி (தமிழகம்), பிரகாஷ் சிங் பாதல் (பஞ்சாப்) போன்ற தலைவர்களும் இந்திய அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications