ஆறே மாதங்களில் 70,000 அதிநவீன ஏகே 203 துப்பாக்கிகள்.. இந்திய ராணுவத்தை வலுப்படுத்த சூப்பர் பிளான்
டெல்லி: அடுத்த ஆறு மாதங்களில் ரஷ்யாவிடம் இருந்து 70 ஆயிரம் அதிநவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகள் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ராணுவத்தை நவீனப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி அடுத்த ஆறு மாதங்களில் ரஷ்யாவிலிருந்து 70 ஆயிரம் அதிநவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை இறக்குமதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் காமோவ் ராணுவ ஹெலிகாப்டர்களை மேம்படுத்தித் தரவும் ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது.
உலக புகழ்பெற்ற ஏகே 47 துப்பாக்கிகளின் மேம்படுத்தப்பட்ட ஒன்று தான் இந்த அதிநவீன ஏகே 203 ரக துப்பாக்கிகள் என்று கூறலாம். இந்திய ராணுவத்திற்கு மொத்தம் 7.70 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தேவை. அவற்றில் அடுத்த ஆறு மாதத்திற்குள் 60 ஆயிரம் துப்பாக்கிகள் உட்பட மொத்தம் 1 லட்சம் துப்பாக்கிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.
மீதி 6.60 லட்சம் துப்பாக்கிகள் வரும் காலங்களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் ரஷ்யா பகிர்ந்துகொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரஷ்ய ஹெலிகாப்டர்கள் நிறுவனத்தின் வாசிலி கிரைடின் கூறுகையில், "இந்தியா சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய ராணுவம் அளித்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப காமோவ் -226 டி ஹெலிகாப்டர்கள் மாற்றியமைக்கப்பட்டும். இதன் மூலம் காமோவ் -226 டி ஹெலிகாப்டர்களை ஒரே விமானியால் இயக்க முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications