டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனைவருக்கும் இலவச வாக்சின்.. ஒரு மாதத்துக்கு 23 கோடி உற்பத்தி செய்யணும்.. இதெல்லாம் சாத்தியமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி கிடைக்க வேண்டும் எனில் அடுத்த 7 மாதங்களுக்கு மாதந்தோறும் 23 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்தாக வேண்டிய நெருக்கடி உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    நாட்டில் மே மாதம் இறுதி வரை கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 16.8. இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவார்கள் எண்ணிக்கை 4.3 கோடி.

    மொத்த மக்கள் தொகையான 136 கோடியில் இதுவரை 12% பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டவர்கள் 3% பேர் மட்டுமே.

    மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசு மக்கள் தொகை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம்: மத்திய அரசு

    ஆண்டு இறுதிக்குள்...

    ஆண்டு இறுதிக்குள்...

    18 வயதுக்கு கீழே உள்ளவர்களை (43.6 கோடி) கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் இலவச கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 12.5 கோடி பேருக்கு 2-வது டோஸும் 73.1 கோடி பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட வேண்டும்.

    தேவை 164 கோடி தடுப்பூசி டோஸ்கள்

    தேவை 164 கோடி தடுப்பூசி டோஸ்கள்

    அதாவது மொத்தம் 159 கோடி கொரோனா தடுப்பூசிகள் அடுத்த 7 மாதங்களில் தேவைப்படுகிறது. 3% கொரோனா தடுப்பூசிகள் சேதமடையும் என கணக்கில் வைத்துக் கொண்டால் மொத்தம் 164 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தேவைப்படும்.

    23 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி

    23 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி

    தற்போது நாட்டில் மாதத்துக்கு 5 கோடி கொரோனா தடுப்பூசிகள்தான் தயாரிக்கப்படுகின்றன. இதனைப் போல சுமார் நான்கரை மடங்கு கொரோனா தடுப்பூசிகள் அதாவது ஒரு மாதத்துக்கு 23 கோடி தடுப்பூசிகளை அடுத்த 7 மாதத்துக்குள் உற்பத்தி செய்தால்தான் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும். அல்லது நாட்டின் கொரோன தடுப்பூசி உற்பத்தியை கணக்கிட்டு இறக்குமதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

    நிம்மதியில் மாநிலங்கள்..

    நிம்மதியில் மாநிலங்கள்..

    கடந்த 7-ந் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசிகளுக்கு மாநில அரசுகள் செலவு செய்ய தேவை இல்லை; 75% கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகிக்கும் என அறிவித்தார். ஆந்திரா, டெல்லி போன்றச் மாநிலங்கள்தான் கொரோனா தடுப்பூசிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. பெரும்பாலான மாநிலங்களுக்கு கொரோனா தடுப்பூசி கொள்முதல் பெரும் சுமையாக இருந்தது. பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பல மாநிலங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளன.

    English summary
    India needs at 164 crore doses of the vaccine in the coming seven months. Now India had administered on an average five crore doses per month only.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X