இந்தியா விவசாயிகளுக்கு ஆபத்து? அமெரிக்கா உடனான வர்த்தக டீல்.. எதன் விலை எல்லாம் தாறுமாறாக குறையும்?
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே ஒரு இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், நீண்டகால வர்த்தகப் பதற்றங்களைத் தணிப்பது, இறக்குமதி வரிகளை மறுசீரமைப்பது, இரு நாடுகளுக்கும் இடையே சந்தை அணுகலை விரிவுபடுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் எந்தப் பொருட்கள் விலை குறையும்.. இந்திய விவசாயிகளை இது எப்படிப் பாதிக்கும் என்பது குறித்துப் பார்க்கலாம்!
பல மாதப் பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் விவாதங்களுக்குப் பிறகு இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கியமான இரு தரப்பு ஒப்பந்தத்தின் ஒரு படியாகவே இது பார்க்கப்படுகிறது. புதிய கட்டமைப்பின் கீழ், பல இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அமெரிக்கா குறைக்கும்.

இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
மறுபுறம், தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமெரிக்க உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் மீதான வரிகளை இந்தியாவும் குறைக்கும் அல்லது முற்றிலுமாக நீக்கும். இதன் மூலம் சில இறக்குமதி உணவுகளை மலிவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கை இந்திய விவசாயிகள் பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது வரை வெளியான தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, எந்தப் பொருட்களில் இறக்குமதி வரி குறைக்கப்படாது.. எந்தப் பொருட்கள் மீதான வரி குறைக்கப்படும். இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தாலும் கூட நமது நாட்டின் முக்கிய துறைகள் இதனால் பாதிக்கப்படாது என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
தானியங்கள் மற்றும் உணவுப் பயிர்கள்
இந்தியாவில் பிரதான உணவுப் பயிர்களாக உள்ள பயிர்களுக்கு எந்தவொரு சலுகையையும் இந்தியா வழங்கப்படவில்லை. கோதுமை, அரிசி, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, சோளம், தினை போன்ற சிறுதானியங்கள், பார்லி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை இருக்காது.
பால் பொருட்கள்
பால்வளத் துறை முழுவதுமாக இந்த வரிச் சலுகை வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. பால், சீஸ், வெண்ணெய் மற்றும் நெய், கிரீம், தயிர், மோர் ஆகியவற்றுக்கு வரிச் சலுகை எதுவும் இருக்காது. வழக்கம் போலவே அதன் மீதான வரிகள் இருக்கும். அதேபோல கோழிக்கறி, இறைச்சி வகைகள், உருளைக்கிழங்கு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் காளான்கள் உள்ளிட்ட காய்கறிகள், சிறு விவசாயிகளால் பொதுவாகப் பயிரிடப்படும் பயறு வகைகள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரிகளும் இந்த ஒப்பந்தத்தில் மாற்றப்படவில்லை.
இந்தியா தனது முக்கிய உணவுத் துறைகளைப் பாதுகாத்தாலும், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகை கொடுத்துள்ளது. இதன் மூலம் இவை நேரடியாக அமெரிக்காவில் இருந்து குறைந்த வரி அல்லது வரி இல்லாமல் இறக்குமதி செய்யப்படும். இதன் மூலம் இந்தப் பொருட்கள் விலையும் குறையும்!
எதன் விலை குறையும்
கால்நடை மற்றும் கோழிப் பண்ணைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தீவனப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் குறைக்கப்படும். புரதச்சத்து நிறைந்த தீவன இன்புட்டாக பயன்படுத்தப்படும் ட்ரைட் டிஸ்டில்லர்ஸ் க்ரெய்ன்ஸ், கால்நடைத் தீவனத்தில் பயன்படுத்தப்படும் சிவப்பு சோளம் ஆகியவற்றின் விலை குறையும். இதன் மூலம் தீவனச் செலவுகள் குறையும்.
விவசாயிகளுக்குச் சிக்கல்
அதேபோல பாதாம், பிஸ்தா, வால்நட்ஸ் ஆகியவற்றுக்கு வரி விலக்கு தரப்படும். இந்தப் பொருட்களின் விலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட பிரஷ் பழங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பழங்களுக்கான வரிகளை இந்தியா குறைக்கும். ஆப்பிள்கள் போன்ற சில பழங்கள், குறைந்தபட்ச இறக்குமதி விலையுடன் கூடிய இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டு விவசாயிகள் இந்த கண்டிஷன்கள் ஓரளவுக்குப் பாதுகாக்கும் என்றாலும் கூட அமெரிக்காவில் இருந்து அதிகப்படியான பழங்கள் வரும்போது இது உள்ளூர் விவசாயிகளைப் பாதிக்கவே செய்யும்.
இது தவிர சோயாபீன் எண்ணெய்யின் இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும். மேலும், ஒயின் மற்றும் மது வகைகளுக்கான இறக்குமதி வரியையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ












Click it and Unblock the Notifications