“கீழ இறங்கச் சொல்லியும் கேட்கல..” தைரியமான ஆளுதான் - உச்சிக்கு போவதற்கு முன்பே உயிர் போன சோகம்!
டெல்லி: நேபாளத்தில் உள்ள காஞ்சன் ஜங்கா மலை உலகின் மூன்றாவது மிக உயரமான மலை. 1852ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான சிகரமாக கருதப்பட்டது. 8,200 மீட்டர் உயரம் கொண்ட இந்த காஞ்சன் ஜங்கா மலைக்கு உலகம் முழுவதுமிருந்து ஏராளமான மலையேறும் வீரர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறிய இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மலை உச்சிக்கு அருகே செல்லும்போது, அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியதாகவும், அதை மறுத்து அவர் ஏறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 52 வயதான நாராயண் அய்யர் என்பவர் காஞ்சன் ஜங்கா மலையில் ஏறியுள்ளார். நாராயண் மலை உச்சிக்கு அருகே சென்றபோது திடீரென்று உயிரிழந்தார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மலையேறும் பயணத்திற்கு ஏற்பாடு செய்த அமைப்பின் இயக்குநர் கூறுகையில், நாராயண் அய்யருக்கு 2 உதவியாளர்களை ஏற்பாடு செய்திருந்தோம். உச்சிக்கு செல்லச் செல்ல அவருக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் அவரை கீழே இறங்குமாறு வழிகாட்டி வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், அவர் உச்சிக்குச் செல்லாமல் இறங்கமாட்டேன் என மறுத்துவிட்டார். இதனால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நாராயணின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடலை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications