IndiGo: கதறும் இண்டிகோ பயணிகள்.. டிக்கெட் பணத்தை திரும்ப பெறுவது எப்படி! என்ன செய்ய வேண்டும்!
டெல்லி: இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் சூழலில், இதனால் பாதிக்கப்பட்டோர் எப்படிப் பணத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள். நாடு முழுக்க இண்டிகோ விமானங்கள் ரத்து தொடர்கதையாகி வரும் நிலையில், புக் செய்தவர்கள் எப்படி ரீபண்ட் பெறலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் இண்டிகோ விமானச் சேவை கடந்த சில நாட்களாகவே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகப் பல நூறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அல்லது பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன. இதன் காரணமாகப் பயணிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இண்டிகோ ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதம் செய்யும் பல வீடியோக்கள் இணையத்திலும் வேகமாகப் பரவி வருகிறது.

இண்டிகோ
மத்திய அரசின் புதிய விதிகளுக்கு ஏற்ப இண்டிகோ ரெடி ஆகாததே இதற்குப் பிரதானக் காரணமாகும். இதற்கிடையே இந்த நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ள இண்டிகோ, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு முழுப் பணத்தைத் திரும்பச் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், பயணிகளுக்குத் தேவையான மாற்று விமானங்கள் மற்றும் ஹோட்டல் மற்றும் உணவு ஆகியவற்றை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது.
இதுபோல புக் செய்தோர் தங்கள் பணத்தை எப்படித் திரும்பப் பெறலாம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இண்டிகோ இணையதளம் வழியாகப் பணத்தைத் திரும்பப் பெறுவது எளிய வழியாகும். இதைச் செய்ய இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அங்கு ரீபண்ட் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். பிறகு உங்கள் PNR எண் அல்லது முன்பதிவு எண் மற்றும் மெயில் ஐடி அல்லது பெயரை (last name) பதிவிடுங்கள்.
எப்படி
அங்கு லாகின் செய்து, (Cancel Booking) என்பதைத் தேர்வு செய்யுங்கள். அடுத்து பணத்தை எப்படி ரீபண்ட் பெற விரும்புகிறீர்கள் என்பதைப் பதிவிடுங்கள். அடுத்த பக்கத்தில் விவரங்களைச் சரிபார்த்து, கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம். அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள் முழுத் தொகையும் எந்த ரத்து கட்டணமும் இன்றித் திரும்பக் கிடைக்கும். விமான நிறுவனமே ரத்து செய்துள்ளதால் முழுப் பணமும் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.
ஒருவேளை நீங்கள் விமான டிக்கெட்டை உள்நாட்டு விமான நிலைய கவுண்டரில் நேரடியாகப் பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தால் ரீபண்ட் பெறுவது இன்னுமே ஈஸி.. அதே விமான நிலைய கவுண்டரில் நேரடியாகவே பணத்தைத் திரும்பப் பெறலாம்.
வேறு தளங்கள்
நீங்கள் மேக் மை டிரிப் போன்ற புக்கிங் தளம் மூலம் டிக்கெட் எடுத்திருந்தால் அல்லது ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் புக் செய்திருந்தால்.. குறிப்பிட்ட அந்தத் தளம் அல்லது ஏஜெண்டுகளை தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் ரீபண்டிற்கு உதவுவார்கள். இருப்பினும், நேரடியாக இண்டிகோ மூலம் ரீபண்ட் பெறுவதை விட இதில் அதிகக் காலம் எடுக்கும்.
பிளான் பி
மேலும், இந்தச் சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இண்டிகோ நிறுவனம் பிளான் பி என்ற ஒரு திட்டத்தையும் இண்டிகோ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கொள்கையின்படி, கூடுதல் கட்டணமின்றி நீங்கள் வேறு இண்டிகோ விமானத்தில் மீண்டும் முன்பதிவு செய்யலாம் அல்லது ரத்து கட்டணம் இன்றி முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
உங்கள் விமானம் முழுமையாக ரத்து செய்யப்பட்டால் அல்லது நீண்ட தாமதம் ஏற்பட்டால் இந்த பிளான் பி ஆப்ஷன் உங்களுக்குக் கிடைக்கும். பிளான் பி ஆப்ஷன் குறித்து இண்டிகோவே பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு நேரடியாக மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் உங்களுக்குத் தெரிவிக்கும். எனவே, புக் செய்யும்போது சரியான மொபைல் எண் மற்றும் மெயில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
இறுதி புகார்
இதில் உங்களுக்கு எதாவது சிக்கல் இருந்தால் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகாரை அனுப்பலாம். அதன் பிறகும் உங்கள் பிரச்சினை தீர்க்கவில்லை என்றால்.. பயணிகள் ஏர்சேவா (AirSewa) என்ற இணையதளம் வழியாகவோ அல்லது நுகர்வோர் நீதிமன்றத்திலோ தங்கள் புகார்களை அளிக்கலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications