ஓரினச் சேர்க்கையால் பரவும் குரங்கு அம்மை? உண்மை என்ன? அறிகுறிகள் என்னென்ன? முழுமையான தகவல்கள் இதோ!
டெல்லி : கேரளாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் வெளிநாட்டு பயண வரலாறு இல்லாத நபருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது மருத்துவ நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குரங்கு அம்மை எய்ட்ஸ் போல ஒரு பால்வினை நோயா? அது எப்படி பரவுகிறது? அதன் அறிகுறிகள் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
Recommended Video
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் தற்போது வரை நான்கு பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சர்வதேச பயண வரலாறு இல்லாத நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு சமூக பரவலா? இந்த தொற்று நோயிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது? என்பது குறித்து பார்க்கலாம்.

குரங்கு அம்மை
முதலில் குரங்கு அம்மை என்பது ஒரு புதிய நோய் அல்ல. இது முதன்முதலில் 1950 ஆண்டுகளின் பிற்பகுதியில் குரங்குகளில் இருப்பது கண்டறியப்பட்டதால் இது குரங்கு அம்மை எனவும், மங்கி பாக்ஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் பெரியம்மை நோய்க்கு காரணமான வேரியலோ போன்ற அதே வகையைச் சேர்ந்தது தான். டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிலையத்திற்குள் உள்ள ஆய்வக சோதனை குரங்குகளின் 1958ஆண்டில் இது முதன்முறையாக கண்டறியப்பட்டது.

எப்படி பரவுகிறது
"குரங்கு அம்மை மனிதர்களுக்கு பரவுவதில் விலங்குகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. மனிதன் மற்றும் குரங்குகள் இடையே எலி, அணில் போன்ற கொறித்துண்ணிகளில் பரப்புகின்றன. மேற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை வைரஸ், மத்திய ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட வைரஸை விட குறைவான வீரியம் கொண்டதாக இருக்கிறது. தற்போது மேற்கு ஆப்பிரிக்க வைரஸ் தான் உலகம் முழுவதும் பரவி வருகிறது என்று சர் கங்காராம் மருத்துவமனையின் நிபுணர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் திரேன் குப்தா கூறுகிறார்.

நெருங்கிய தொடர்பு
விலங்குகள் (குரங்குகள், அணில் போன்ற காட்டு கொறித்துண்ணிகள்) அல்லது விலங்கு இறைச்சி (காட்டு விலங்குகள்) அல்லது குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் முதன்மையாக பரவுகிறது. அதே நேரத்தில் இது காற்றின் மூலம் பரவாது. ஆனால் பாதிக்கப்பட்ட நோயாளியுடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருந்தால் 3 மணிநேரம், 2 மீட்டருக்குள் இருக்கும் போது பெரிய நீர்த்துளிகள் மூலம் தொற்று ஏற்படலாம். இது பெரியம்மை மற்றும் சிக்கன் பாக்ஸ் ஆகியவற்றை விட குறைவான தொற்றுநோயாகும்.

ஓரின சேர்க்கையால் பரவுமா?
குரங்கு அம்மை பாலியல் ரீதியாக மட்டும் பரவும் தன்மை கொண்டதா என்ற குழப்பமும் நிலவுகிறது. அது முற்றிலும் பொய். ஆனால் இது ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே, குறிப்பாக பல ஆண்களுடன் உறவு வைத்திருக்கும் ஆண்களிடையே அதிகம் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் கூறுகிறார். மேலும் "ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுடன் நெருக்கமாக பணியாற்றுவது காரணமாகவும் பரவலாம் எனவும், அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம், மனித உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்" என்கிறார்.

பால்வினை நோய் ?
ஆனால் இது ஒரு பால்வினை நோய் தான் என்பதை சுகாதார நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. "இது ஒரு STD மட்டுமே என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. பாலியல் ரீதியாக பரவும் நோய் முறைகள் மூலம் மட்டுமே பரவுகிறது. இது எச்.ஐ.வி போன்றது அல்ல. ஆனால் இந்த இதுவரை பாதிக்கப்பட்ட ஆண்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். பாதுகாப்பற்ற மற்றும் பரிசோதிக்கப்படாத இரத்தமாற்றம் போன்ற பரவல் முறைகளும் உள்ளன," என்று எய்ம்ஸ் சமூக மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் கூறினார். இதுவரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இல்லை. தோல் தொடர்பு மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பரவலாம் என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் பேராசிரியர் மற்றும் தலைமை லைஃப் கோர்ஸ் தொற்றுநோயியல் டாக்டர் கிரிதர் பாபு கூறினார்.

அறிகுறிகள் என்ன?
நோய் பாதிப்புகளுடன், கொப்புளங்கள், சொறி, தோல் வெடிப்பு போன்றவை ஏற்படுகின்றன. பொதுவாக காய்ச்சல் தோன்றிய ஒன்றிலிருந்து நான்கு நாட்களுக்குள் தொடங்கி இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை இந்த பாதிப்பு தொடர்கிறது. கொப்புளம் வந்தவுடன் வலியாக இருக்கும், அரிப்பும் ஏற்படுகிறது. கொப்புளங்கள் பொதுவாக 2 முதல் 5 மிமீ விட்டம் கொண்ட குமில்கள் போல் தொடங்குகிறது. மங்கி பாக்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பல குறிப்பிடப்படாத அறிகுறிகளும் உள்ளன. அசாதாரண அமினோட்ரான்ஸ்ஃபெரேஸ்கள், லுகோசைடோசிஸ், த்ரோம்போசைட்டோபீனியா மற்றும் ஹைபோஅல்புமினீமியா ஆகியவை இதில் அடங்கும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications