டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா முழுவதும் ஊரடங்கு.. ஈ, காக்கா கூட இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் முக்கிய நகரங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான நகரங்களில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

கொரோனாவின் சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அந்த வகையில் இன்று ஊரடங்கையொட்டி நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து கடுமையாக முடங்கியுள்ளது. மக்கள் போக்குவரத்தும் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி கிடக்கிறது.

கொரோனா வைரஸை தடுக்க இதுதான் ஒரே வழி.. பேரிடர் நிர்வாக துறை ஆணையர் எச்சரிக்கை கொரோனா வைரஸை தடுக்க இதுதான் ஒரே வழி.. பேரிடர் நிர்வாக துறை ஆணையர் எச்சரிக்கை

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை

கடந்த ஆண்டு 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில் தோடா என்ற இடத்தில் பொதுமக்கள் யாரும் நடமாடவில்லை. எனினும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.

ரயில்கள் ரத்து

அது போல் தலைநகர் டெல்லியில் சாலைகளில் உலா வரும் பொதுமக்களை வீட்டுக்கு செல்லுமாறு அவர்களுக்கு பூக்கொடுத்து போலீஸார் அன்பான வேண்டுகோள் விடுத்தனர். மேலும் இன்றைய ஊரடங்கின் அவசியத்தையும் உணர்த்தினர். அது போல் இன்று 10 மணி வரை அனைத்து ரயில்களையும் இந்திய ரயில்வே ரத்து செய்துவிட்டது.

ஆள் இல்லை

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் மக்கள் ஊரடங்கு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ராஞ்சி ரயில் நிலையத்தில் ஆள் அரவமின்றி காணப்படுகிறது.

தாதர்

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக அளவிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்கவில்லை, தாதர் ரயில் நிலையத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட மக்கள் கூட்டம்.

சாலைகள்

உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்டில் ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி காணப்படும் நிலை உள்ளது.

பாலைவனம்

கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. சாலைகளில் ஈ காக்கா கூட இல்லாமல் வெறிச் சோடி காணப்படுகிறது. அது கேரளா மாநிலத்திலும் திருவனந்தபுரம் மத்திய பகுதி பாலைவனம் போல் காட்சியளித்தது.

ஹைதராபாத்

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து தமிழகத்தில் சென்னையில் காணப்படும் ஊரடங்கு உத்தரவு. அது போல் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹிமாயத்நகரில் மக்கள் நடமாட்டம் இல்லாத சாலைகள்.

ஆள் நடமாட்டம்

ஆள் நடமாட்டம்

அது போல் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர், அஸ்ஸாமின் குவாஹாத்தி, திரிபுராவின் அகர்தலா, மணிப்பூர் தலைநகர் இம்பால், மேகாலயா மாநிலம் ஷில்லாங், பீகார் மாநிலம் பாட்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சாலைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகியன மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

English summary
Janata Curfew is observed today as the most of parts in India is desert look.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X