குழந்தை கருப்பா இருந்தாதான் நம்ம ஜாதி.. வெள்ளையா இருந்தா மரண தண்டனை.. ஜாரவா பழங்குடியின் விசித்திரம்
டெல்லி: அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஜாரவா பழங்குடியினருக்கு வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனையை விதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் நிறைய பழங்குடியின மக்கள் வசித்துவருகிறார்கள். அவர்களில் ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள், மரபுகள் இருக்கும்.
அந்த வகையில் அந்தமான் தீவுகளில் வசிக்கும் ஒரு பழங்குடியினரான ஜாரவா மக்களுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர்கள் பசிபிக் தீவை சேர்ந்தவர்கள் என்பதற்கான அம்சங்கள் உள்ளன. இந்த தீவுகள் இந்தியாவில் இருக்கும் போதிலும அவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல என சொல்லப்படுகிறது.

மண்ணின் மைந்தர்கள்
இவர்களை மண்ணின் மைந்தர்கள் என்றும் அழைக்கிறார்கள். இவர்கள் வித்தியாசமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த இனத்தை சேர்ந்த பெண்களுக்கு கருப்பு நிறத்தில்தான் குழந்தை பிறக்க வேண்டுமாம். ஒரு வேளை வெள்ளை நிறத்தில் பிறந்துவிட்டால் அந்த குழந்தையை அவர்கள் கொன்றுவிடுவார்கள் என சொல்லப்படுகிறது.

பழங்குடியின மக்கள்
உலகில் வாழும் இந்த இனத்தை சேர்ந்த பழங்குடியின மக்களில் எல்லாரும் இதை செய்வதில்லை என்ற ஒரு தகவலும் உள்ளது. அந்தமானில் ஜாரவா பழங்குடியினத்தவர்கள் 55 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர்கள் அழிவின் விளிம்பை எட்டியுள்ளார்கள என சொல்லலாம்.

குறைந்த அளவு மக்கள்
இவர்கள் மொத்தம் 380 பேர் மட்டுமே உள்ளனர். இவர்கள் கற்காலத்தில் வசித்தது போலவே தற்போதும் வசிக்கிறார்கள். இவர்கள் வெளியுலக தொடர்பின்றி வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடி உண்கிறார்கள். பன்றிகளையும் உண்பார்கள். ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர்கள் கருப்பாக இருப்பார்கள். இந்த நிலையில் வெள்ளை நிறத்தில் பிறக்கும் குழந்தையை ஏற்க மறுத்து கொன்றுவிடுகிறார்கள்.

வெள்ளை நிற குழந்தை
வெள்ளை நிற குழந்தை தங்கள் இனத்தை சார்ந்தது அல்ல என்றே கருதுகிறார்களாம். அது போல் இந்த சமூகத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அதற்கு தாய் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தாய்ப்பாலை கொடுப்பார்கள். ஜாரவா பழங்குடியினத்தில குழந்தை கருப்பாக பிறக்க வேண்டும் என்பதால் கர்ப்பிணிகளுக்கு விலங்குகளின் ரத்தத்தை குடிப்பதற்கு கொடுப்பார்கள்.

சட்டவிரோதம்
அது போல் ஒரு பெண் கணவரை இழந்துவிட்டால் அவரது குழந்தையையும் கொல்லும் வழக்கம் இவர்கள் இனத்தில் உள்ளது. இவர்களை சுற்றுலா பயணிகள் நேரில் போய் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தங்களை புகைப்படம் எடுத்து வெளியிடுவதையும் இவர்கள விரும்ப மாட்டார்கள். அது சட்டவிரோதம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications