Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பியில் மதக் கலவரமே நடக்கலையா..? முதலிடத்தில் எந்த மாநிலம்? - என்.சி.ஆர்.பி அறிக்கை சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதக் கலவரங்கள் மிகக் குறைவாக, அதாவது 2021ஆம் ஆண்டில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டுமே நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் 2021-ம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவிக்கிறது.

அதேபோல, முந்தைய ஆண்டுகளை விட குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உ.பி.யில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டும் 2021ல் நடைபெற்றுள்ளது.

மகராஷ்டிராவில் மிக அதிகமாக 100 மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 77, பீகார் 51, ஹரியாணா 40 என மதக் கலவரங்கள் நடந்துள்ளன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம்

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவாகும் வழக்குகளை இந்திய தண்டனைச் சட்டம், சிறப்பு சட்டம் மற்றும் உள்ளூர் சட்டங்கள் என்ற அடிப்படையில் வகைப்படுத்தி பதிவு செய்து வருகிறது. நாடு முழுவதும் கொலை, விபத்து, கலவரம் என நிகழ்வுகள் வாரியாக ஆண்டு தோறும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறது என்.சி.ஆர்.பி.

கொலைக் குற்றங்கள்

கொலைக் குற்றங்கள்

அந்தவகையில், 2021ஆம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகளின் விவரங்கள், நிகழ்வு வாரியாக, மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் மொத்தமாக 60,96,310 குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவற்றில், நாடு முழுவதும் 1,49,404 குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்திருக்கின்றன. 2021ல் நாடு முழுவதும் நடைபெற்ற மொத்த கொலைக் குற்றங்கள் 29,272. இவற்றில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 3,717 கொலைகளும், பீகாரில் 2,799 கொலைகளும், மகாராஷ்டிராவில் 2,330 கொலைகளும் நடந்துள்ளன.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

வட இந்தியாவில் அதிகமான மதக் கலவரங்கள் நடைபெறும் மாநிலமாக உத்தர பிரதேசம் கருதப்படுகிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரங்களான பர்நகர், அலிகார், மீரட், வாரணாசி, முராதாபாத், புலந்த்சாகர் ஆகியவை பல ஆண்டுகளாகவே மதக் கலவரங்களுக்குப் பெயர்போன நகரங்கள் ஆகும். ஆனால், 2021ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டுமே பதிவாகியுள்ளது.

மதக் கலவரங்கள்

மதக் கலவரங்கள்

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உ.பி.யில் ஒரே ஒரு மதக் கலவரம் மட்டும் 2021ல் நடைபெற்றுள்ளது. மகராஷ்டிராவில் மிக அதிகமாக 100 மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. ஜார்க்கண்ட் 77, பீகார் 51, ஹரியாணா 40 என மதக் கலவரங்கள் நடந்துள்ளன. மற்ற பெரிய மாநிலங்களோடு ஒப்பிடுகையில், உபியின் மதக் கலவரமே கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை உள்ளது.

மற்ற வகை குற்றங்கள்

மற்ற வகை குற்றங்கள்

உத்தர பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக குறைந்துள்ளதாக என்சிஆர்பி டேட்டா தெரிவிக்கிறது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 2019 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக 18,943 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது 2021 இல் 16,838 ஆகக் குறைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 இல் 59,853 இல் இருந்து 2021 இல் 56,083 ஆகக் குறைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+