“வெள்ளைக்கார கல்வியை கற்றது.. கற்பூர புத்தி!” நிர்மலா சீதாராமனை சாடிய கமல்ஹாசன்?
டெல்லி: மாநிலங்களவையில் உரையாற்றிய கமல்ஹாசன், தமிழில் பேசி கவனத்தை ஈர்த்திருந்தார். அவரது கருத்துக்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறி வைத்திருந்தது என்று பலரும் கூறி வருகின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினராக ஆன பின்னர் இன்றுதான் கமல்ஹாசன் தனது முதல் உரையை பேசியிருக்கிறார். ஆங்கிலத்தில் தொடங்கி, முடிக்கும்போது அவர் தமிழில் முடித்திருந்தார்.

பிச்சை பாத்திரம்
தமிழில் அவர் பேசிய விஷயங்கள் விவாதமாகியுள்ளன. அவர் பேசியது இதுதான், "பிரியப்பட்ட சகோதரி.. கேட்கும் என்று நினைக்கிறேன். தெலுங்கில் இசை பாடி வந்த அந்த மா மனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிச்சை பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள் நவீன தாளத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள்.
கற்பூர புத்தி
நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது
சாபம் போடுகிறேன்
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
வந்தீர் வென்றீர் செல்வீர்
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக, என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பமும் வீட்டைச் சுடுக. வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன். வணக்கம், அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு. சென்றும் வருவேன், நாளை எமதே. உங்கள் கமல்ஹாசன், ஜெய்ஹிந்த்" என பேசியிருக்கிறார்.
நிர்மலா சீதாராமன் பேசியது என்ன?
கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதங்கள் நடந்தன. அதில் பேசியி நிர்மலா சீதாராமன், "தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது. தமிழ் படித்தது பிச்சை எடுப்பதை தவிர உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை. இதற்காக செலவிட்ட காலத்தை வேறு துறையில் செலவிட்டிருந்தால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும்" என பெரியார் விடுதலை இதழில் சொன்னதை பேசியிருந்தார். இப்படி பேசியதற்காக நிர்மலா சீதாராமன் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், பிரியப்பட்ட சகோதரி என்று கூறி, கமல்ஹாசன் பேசியது நிர்மலா சீதாரமனை விமர்சித்துதான் என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications