கொரோனா ஆன்டிபாடிகள்.. ம.பி-இல் தான் அதிகம்.. கேரளா தான் ரொம்ப கம்மி.. சிரோ சர்வே-இல் பரபர முடிவு
டெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட சிரோ சர்வே-இல் நாட்டிலுள்ள 4இல் மூன்று பேருக்கு கொரோனா ஆன்டிபாடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 79% பேருக்கும் கேரளாவில் குறைந்தபட்சமாக 44.4% பேருக்கும் ஆன்டிபாடிகள் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கொரோனா 2ஆம் அலை பாதிப்பு ஏப்ரல் மே வரை தொடர்ந்து. அப்போது நாட்டிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
அந்த சமயத்தில் தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரைகூட சென்றது. இருப்பினும், உண்மையான பாதிப்பு பதிவு செய்யப்பட்டதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே ஆய்வாளர்கள் எச்சரித்தனர்.

சிரோ சர்வே
இந்நிலையில், மக்களிடையே கொரோனா ஆன்டிபாடிகள் எந்தளவு உள்ளது என்பதைக் கண்டறிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அவ்வப்போது சிரோ சர்வே நடத்தப்படுவது வழக்கம். பொதுவாக கொரோனா வேக்கிசன் எடுத்துக் கொண்டவர்களின் உடலிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் உடலில் ஆன்டிபாடிகள் இருக்கும்.

கேரளாவில் தான் கம்மி
இந்நிலையில், கடந்த ஜூன் 16 முதல் ஜூலை 6ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட சிரோ சர்வே முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 11 மாநிலங்களில் எடுக்கப்பட்ட இந்த சர்வே-இல் நான்கில் மூன்று பேருக்கு கொரோனா ஆன்டிபாடி இருப்பது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் 79% பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன. குறைந்தபட்சாக கேரளாவில் 44.4% பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளது தெரியவந்துள்ளது.

மாநில வாரியாக தகவல்
அதேபோல ராஜஸ்தான் - 76.2 சதவீதம், பீகார் - 75.9 சதவீதம், குஜராத் - 75.3 சதவீதம், சத்தீஸ்கர் - 74.6 சதவீதம், உத்தரகண்ட்- 73.1 சதவீதம், உத்தரப்பிரதேசம் 71 சதவீதம், ஆந்திர - 70.2 சதவீதம், கர்நாடகா - 69.8%, தமிழ்நாடு- 69.2%, ஒடிசா 68.1 சதவீதம், அசாம் 50.3 சதவீதம், மகாராஷ்டிரா 58 சதவீதம் பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள்
இது நல்ல விஷயம் என்றாலும்கூட நாட்டில் இன்னும் பல கோடி போர் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்திலேயே உள்ளனர். நான்கில் மூன்று பேருக்கு ஆன்டிபாடிகள் உள்ளன என்றாலும், மீதமிருக்கும் சுமார் 30 முதல் 40 கோடி பேர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, முடிந்தவரை விரைவாக அனைவரும் வேக்சின் எடுத்துக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறதது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications