டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மீண்டும் மீடியாக்களில் பாஜக தலைவர் அத்வானி.. நிறைவேறாத விருப்பம்! ஒருகாலத்தில் எப்படி இருந்த மனுசன்?

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி கடந்த சில மாதங்களாக எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் நேற்று மீண்டும் ஊடகங்களில் தோன்றியுள்ளார்.

இன்று இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அசைக்க முடியாத வலிமையை பெற்று நிற்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர்களில் முதன்மையானவர் எல்.கே.அத்வானி. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் அத்வானி.

பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கியதில் இருந்தே அதன் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து வந்தவர். இவர் நடத்திய ரத யாத்திரைகளால் ஒரு பக்கம் நாட்டின் பல பகுதிகளில் மதக்கலவரம் தோன்றி ரத்த ஆறுகள் ஓட மறுபக்கம் அதில் தாமரை மலர்ந்து கொண்டிருந்தது.

சிறுபான்மையினர் என்னை ஏரியாக்குள்ளயே விடல.. எல்லாத்துக்கும் பாஜக தான் காரணம்! சொல்வது டாக்டர் சரவணன்சிறுபான்மையினர் என்னை ஏரியாக்குள்ளயே விடல.. எல்லாத்துக்கும் பாஜக தான் காரணம்! சொல்வது டாக்டர் சரவணன்

அடல் - அத்வானி இணை

அடல் - அத்வானி இணை

ஜன சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த அத்வானி, அக்கட்சி கலைக்கப்பட்ட பின்னர் கடந்த 1980 ஆம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சியை தொடங்கினார். தற்போது பாஜகவில் மோடி - அமித்ஷா இணை அசைக்க முடியாத நிலையில் உள்ளதைபோல் அப்போது அக்கட்சியில் அசைக்க முடியாத இருபெரும் தலைவர்களாக வாஜ்பாயும் அத்வானியும் இருந்தனர்.

மத்திய அமைச்சர்

மத்திய அமைச்சர்

இந்திரா காந்தி அவசர நிலையை பிரகடனப்படுத்திய பிறகு ஏற்பட்ட காங்கிரஸ் மீதான அதிருப்தியால், வெற்றிபெற்று மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவியேற்க அவரது அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தார் அத்வானி. அதன் பின்னர் கடந்த 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் மத்திய உள்துறை அமைச்சராக அத்வானி பதவி வகித்தார்.

மோடியின் அறிமுகம்

மோடியின் அறிமுகம்

2002 முதல் 2004 வரை வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்தியாவின் துணை பிரதமராக பதவி வகித்தவர் அத்வானி. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவேன் என்று கூறி பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அத்வானி தோல்வியையே தழுவினார். 2014 தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு தரப்பும், அத்வானியே மோடியின் பெயரை பரிந்துரைந்ததாக மறு தரப்பும் கூறி வந்தது.

குடியரசுத் தலைவராக விருப்பம்

குடியரசுத் தலைவராக விருப்பம்

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பின் 2015 ஆம் ஆண்டு அத்வானிக்கு நாட்டின் 2 வது பெரிய விருதான பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. அத்வானி மீது இருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பிரதமர் ஆக வேண்டும் என்ற அத்வானியின் விருப்பம் நிறைவேறாத நிலையில், அவர் குடியரசுத் தலைவராக விரும்பியதாக கூறப்பட்டது. 2017 குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார்.

அதிருப்தி

அதிருப்தி

அதனால் அத்வானி மோடி - அமித்ஷா மீது அதிருப்தியில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. அதன் பின்னர் ஒரு சில கட்சி நிகழ்வுகளில் மட்டுமே அத்வானியை காண முடிந்தது. அதிலும் அத்வானியை மோடி கண்டுகொள்ளாததைபோல் இருந்த சில புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பலரும் பகிர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2021 நவம்பர் மாதம் டெல்லியில் உள்ள அத்வானி இல்லத்துக்கு பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பாஜக தலைவர்கள் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

மீண்டும் மீடியாக்களில்..

மீண்டும் மீடியாக்களில்..

அதன் பின்னர் அத்வானி குறித்த எந்த செய்திகளும் வெளியாகவில்லை. தற்போது குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்தபோதும் அத்வானி குறித்து பலரும் தேடி இருக்கின்றனர். ஆனால், அவர் குறித்த அண்மை செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. பாஜக நிகழ்வுகளிலும் அவரை காண முடியவில்லை. இந்த நிலையில் நேற்று தனது இல்லத்தில் அத்வானி குடும்பத்துடன் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார். இந்த காட்சிகளும், படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

English summary
LK Advani once again arised in Medias - Interested to be a President, But not yet: பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி கடந்த சில மாதங்களாக எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் இருந்த நிலையில் நேற்று மீண்டும் ஊடகங்களில் தோன்றியுள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X