டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பஸ், ரயில், விமானம்.. லாக்டவுன் 4.0ல் நடக்க போகும் அதிரடி மாற்றங்கள்.. மத்திய அரசின் செம திட்டம்!

இந்தியாவில் லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும், என்ன மாதிரியான தளர்வுகள் இருக்கும் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும், என்ன மாதிரியான தளர்வுகள் இருக்கும் என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3 முறை இதுவரை கொரோனா காரணமாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் லாக்டவுன் 4.0 இந்தியாவில் அமல்படுத்தப்படும், இது தொடர்பான அறிவிப்பு மே 18ம் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சிங்கார சிங்கப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்... மீட்பு விமானம் ரத்து செய்யப்பட்டதால் கலக்கம்சிங்கார சிங்கப்பூரில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்... மீட்பு விமானம் ரத்து செய்யப்பட்டதால் கலக்கம்

முக்கிய தளர்வு என்ன

முக்கிய தளர்வு என்ன

இந்த லாக்டவுன் 4.0 மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் இந்தியாவில் பெரும்பாலான தொழில்கள், நிறுவனங்களுக்கு அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டு என்கிறார்கள். பொருளாதார செயல்பாடுகளை தொடங்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள். கடைகள் திறக்கும் நேரம் தொடங்கும் அலுவலகம் இயங்கும் விதிகள் வரை பல விஷயங்களில் தளர்வுகள் வரும் என்று கூறுகிறீர்கள்.

சிவப்பு மண்டலம் நிலை

சிவப்பு மண்டலம் நிலை

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சிவப்பு சோன்களுக்கு நிறைய தளர்வுகள் வரும். கடந்த லாக்டவுனில் கிரீன் சோன்களுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் இந்த முறை சிவப்பு சோன்களுக்கும் வரும் என்கிறார்கள். ஆனால் சிவப்பு சோன்களில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் தளர்வுகள் வராது. இனி கட்டுப்பாட்டு பகுதிகள் மீது மட்டும் கவனம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து அதிகரிக்கும்

போக்குவரத்து அதிகரிக்கும்

இந்த லாக்டவுன் 4.0ல் இந்தியாவில் பெரிய அளவில் போக்குவரத்து கட்டுப்பாட்டில் தளர்வுகள் கொண்டு வரப்படும். பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் விமான சேவை முக்கியமான நகரங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும். உள்ளூர் விமான சேவை மட்டும் தொடங்கும். வெளிநாட்டு விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும். இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

மொத்தமாக மாற்றுவார்கள் ரயில்கள்

மொத்தமாக மாற்றுவார்கள் ரயில்கள்

இன்று ரயில்வேத்துறை ஜூன் 30 வரை சிறப்பு ரயில்கள் தவிர மற்ற ரயில்கள் இயங்காது என்று அறிவித்துள்ளது. இதனால் பொது ரயில் சேவைகளை தொடங்காமல் மத்திய அரசு சிறப்பு ரயில் சேவையை மட்டும் தொடர்ந்து வழங்கும். இந்த ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதேபோல் கேப்கள், ஆட்டோக்கள் இயங்கவும் நாடு முழுக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறுகிறார்கள்.

குழப்பம் ஏற்படாது

குழப்பம் ஏற்படாது

ஒவ்வொரு முறை லாக்டவுன் தளர்வுகள் வரும் போதும் நிறைய குழப்பங்கள் ஏற்படும். எது தொடங்கும் எது தொடங்காது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய அரசு செம திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன்படி இந்த முறை எதெல்லாம் இயங்காது என்ற அறிவிப்பை வெளியிடும். அதை தவிர மற்ற அனைத்து விஷயங்களும் செயல்படும் என்று அறிவிக்க போகிறது. இதனால் குழப்பங்கள் குறையும் என்கிறார்கள்.

திறக்க வாய்ப்பில்லை

திறக்க வாய்ப்பில்லை

அதே சமயம் தியேட்டர்கள் திறக்காது என்று கூறுகிறார்கள். மால்களும் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. கோவில்கள், வழிபாட்டு தளங்கள் செயல்பட வாய்ப்புள்ளது. மக்கள் வெளியே செல்லும் நேரத்திற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று கூறுகிறார்கள். மே 16ம் தேதி இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Lockdown 4 will see the ease in transport all over India in all zones.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X