ஹீரோ அவதாரம் கேடயத்துடன் சிசோடியா.. கெஜ்ரிவால் வெளியிட்ட விளக்கப்படம்.. அதே பாணியில் பாஜக பதிலடி
டெல்லி: மணீஷ் சிசோடியா சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள நிலையில், அவர் ஹீரோ அவரதாரம் தரித்து இருப்பது போன்ற கேடயத்தை அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் வெளியிட்டார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவும் கேடயம் வெளியிட்டு இருப்பது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் ஏழாம் பொருத்தாம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒரே முட்டல் மோதல்கள் நீடித்து வருகிறது.
இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன.

சிபிஐ சோதனை
இத்தகைய சூழலில், கடந்த நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கையில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரை செய்தார். இதையடுத்து, விசாரணையை மேற்கொண்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தது. மணீஷ் சிசோடியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை மேற்கொண்டது.

மணீஷ் சிசோடியாவுக்கு சம்மன்
இந்த நிலையில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகுமாறு மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று சிபிஐ முன்பாக விசாரணைக்கு மணீஷ் சிசோடியா ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு பிறகு தான் கைது செய்யப்படலாம் என்றும் மணீஷ் சிசோடியா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்த விவகாரங்களால் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்
சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில், டெல்லி துணை முதல்வரை ஹீரோ அவதாரம் போல சித்தரிக்கும் ஒரு விளக்கப்படத்தை கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இந்த விளக்க படத்தில் படித்துக்கொண்டு இருக்கும் ஒரு சிறுமிக்கு ஒரு கையில் பேனாவை கொடுத்துக்கொண்டு மற்றொரு கையில் டெல்லி கல்வி மாடல் என எழுதப்பட்ட கேடயம் ஒன்றை கையில் ஏந்திக்கொண்டு பாதுகாப்பது போல தாங்கி பிடித்து இருக்கிறார். இந்த கேடயத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை என எழுதப்பட்ட அம்புகள் மழைபோல பாய்கின்றன.

பதிலுக்கு பாஜகவும் ட்விட்
டெல்லி கல்வி மாடலை தாங்கிக்கொள்ள முடியாத மத்திய அரசு விசாரணை அமைப்புகளை ஏவி விட்டு மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கடி கொடுப்பதாக சித்தரித்து கெஜ்ரிவால் இந்த விளக்கப்படத்தை வெளியிட்டு இருப்பதாக தெரிகிறது. கெஜ்ரிவால் இந்த விளக்கப்படத்தை விட்டு சில நிமிடங்களில் பாஜக பதிலடியாக ஒரு விளக்கப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மதுபான பாட்டில்களையும் பணத்தையும் காப்பாற்றுவதற்காக புத்தகம் வடிவிலான ஒரு கேடயத்தை தாங்கி பிடிப்பதாக படம் ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது.

மதுபான பாட்டிலுடன் இருப்பது போல
டெல்லி பாஜகவின் துணைத் தலைவர் சுனில் யாதவ் இந்த விளக்கப்படத்தை (illustration) வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் கெஜ்ரிவால் ஒரு கையில் மதுபான பாட்டிலுடன் மற்றொரு கையில் ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்துடன் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் என்ற வேடத்தில் மதுபான அமைச்சர் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications