விடாதீங்க.. "ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்க".. மாநில சுகாதார துறை அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளனர்
டெல்லி: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கண்டிப்பாக முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், அதனை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.. ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள் என்ற இயக்கம் அமலில் உள்ள நிலையில், அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் போடுவதை உறுதி செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவில் தொற்று வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, மொத்தமாக நீங்கவில்லை.. தினம் தினம் பாதிப்புகள் இருக்கவே செய்கிறது.
நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 11,466 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது... கடந்த 266 நாட்களில் இல்லாத அளவுக்கு அன்றாட பாதிப்பு குறைந்துள்ளது.

பாதிப்புகள்
என்றாலும், கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.. அதேசமயம், தடுப்பூசிகளை செலுத்துவதிலும் நாடு மும்முரமாகி கொண்டிருக்கிறது.. இதுவரைக்கும் 110 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன... எனினும், நாட்டின் 12 மாநிலங்களின் 45 மாவட்டங்களில் ஒரு டோஸ் தடுப்பூசியை 50 சதவீதத்துக்கும் குறைவானோர் மட்டுமே போட்டுள்ளனர்.

அறிவுறுத்தல்
இதுகுறித்து அந்த மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வீடு வீடாக சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்... இதற்காகவே "ஹர் கர் தஸ்தக்" அதாவது "ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்" என்ற இயக்கத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கையில் எடுத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி நிலைமையை ஆய்வு செய்ய அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் நடந்தது..

ஆலோசனை
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், சில அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் மாநில சுகாதார அமைச்சர்களுக்கு அவர் கூறினார். அதில், 70 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளனர்... 38 சதவீதத்தினர் 2-வது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்டோர் 2-வது டோஸ் தடுப்பூசியை போடவில்லை.

கொரோனா
அதனால், "ஒவ்வொரு வீட்டையும் தட்டுங்கள்" என்ற இயக்கம் தொடங்கியுள்ள நிலையில், வயது வந்த அனைவரும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போராட்டம் இறுதிக்கட்டத்தில் இருப்பதால், அது முழுவதுமாக முடிவதற்குள் இந்த பாதுகாப்பை குறைத்து விடக்கூடாது... அதனால், 18 வயதான தகுதி வாய்ந்தவருக்கு தடுப்பூசி போடாமல் விடுபட்டு விடக்கூடாது.. இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.. இதற்காகவே பஸ் ஸ்டாண்ட், ரெயில்வே ஸ்டேஷன்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த வேண்டும்...

வியாபாரிகள்
நடமாடும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வேண்டும்... டார்கெட் வைத்துள்ள பகுதிகளில், 100 சதவீதம் தடுப்பூசி போட்டு முடிப்பதை தடுப்பூசி தொடர்பான குழுக்கள் உறுதி செய்து கொள்ள, அதிகளவு தடுப்பூசிகளை போடுகிற குழுக்களை அடையாளம் கண்டு பாராட்டுவதற்கு ஒரு வழிமுறையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவினரை சென்றடைய வேண்டும்... ஒரு நாள் கடைக்காரர்கள், தெரு வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், இன்னொரு நாள், விவசாயிகள், தொழிலாளிகள் என இப்படி இலக்கு வைத்து முயலலாம்.

மா.சுப்பிரமணியம்
நமக்கு இன்னும் தொற்று முழுமையாக நீங்கவில்லை.. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டும்கூட தொற்று பரவி கொண்டு இருக்கிறது.. அதனால், தடுப்பூசிகளையும் கொரோனா கால கட்டுப்பாடுகளையும் விடாமல் கடைப்பிடிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்... இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், கேரளாவின் வீணா சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு மாநில சுகாதார அமைச்சர்கள், மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்பட பலர் வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications