'மீடியா ஒன்' லைசன்ஸ் விவகாரம்: ஆவணங்களை சமர்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: பிரபல மலையாள செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் லைசன்ஸை புதுபிக்க முடியாது என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
கேரளாவில் அரசியல் விவாத நிகழ்ச்சிகளுக்குப் பேர்போன தொலைக்காட்சி 'மீடியா ஒன்'. இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கு, மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் தடைவிதித்தது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட சேனல்களின் பட்டியலிலிருந்து மீடியா ஒன் டி.வி சேனலின் பெயர் நீக்கப்பட்டது. இதனால், அதன் ஒளிபரப்பு சேவை தடைப்பட்டது.

மீடியா ஒன்
கடந்த ஆண்டு முதலே மீடியா ஒன் டி.வி சார்பில், சேனல் உரிமத்தைப் புதுபிப்பதற்கான விண்ணப்பம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம், மீடியா ஒன் சேனலுக்குப் பாதுகாப்பு அனுமதி வழங்கவில்லை என்று கூறி சேனலின் உரிமத்தைப் புதுப்பிக்க ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணம்
ஜமாத் இ இஸ்லாமிக்கு ஆதரவு கொடுப்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற இந்த செய்தி நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்யமம் நிறுவனத்தின் 'மீடியா ஒன்' கேரள நீதிமன்றத்தில், ஒலிபரப்பு அமைச்சகத்தின் உத்தரவை ரத்து செய்ய சொல்லி மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம், இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பைஅடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர் மீடியா ஒன் நிறுவனத்தினர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசந்த், மீடியா ஒன் நிறுவனத்தில் லைசன்ஸ் வழங்காததற்கான காரணத்தையும் அதற்கு உரிய ஆவணத்தையும் வரும் 15ம் தேதி சமர்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ஊழியர்கள்
தொலைக்காட்சி நிறுவனம் சார்பாக வழக்கறிஞர் தேவ் வாதாடினார். அப்போது, ''இந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 400 பத்திரிக்கையாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, லைசன்ஸ் வழங்க வேண்டும் என்று வாதாடினார். மத்திய அரசு ஆவணங்களை தாக்கல் செய்யும் வரை அமைதியாக இருங்கள் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தடை
மீடியா ஒன் சேனலுக்கு, மத்திய அரசு ஏற்கெனவே 2020-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து, கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன், ஏசியாநெட் ஆகிய சேனல்கள் ஒருதலைப்பட்சமாக செய்தி ஒளிபரப்பியதாகவும், மத்திய அரசின் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகளை மீறி செயல்பட்டதாகவும் கூறி, 48 மணி நேரத்துக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications