டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எமர்ஜென்சி.. டெல்லியில் மோசமான காற்று மாசு.. மருத்துவ அவசர நிலை பிறப்பிப்பு.. மக்கள் கடும் அவதி!

அதிக காற்று மாசு காரணமாக தற்போது டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: அதிக காற்று மாசு காரணமாக தற்போது டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் காற்று மாசு அளவு ஆபத்து அளவை அங்கு எட்டி இருக்கிறது.

இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை டெல்லியில் உருவாகி உள்ளது. மேலும் இந்த புகையால் டெல்லியில் அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு 1010 புள்ளிகளை விட அதிகமாக இருக்கிறது.

என்னை மன்னிச்சிடுங்க.. சீசரை நல்லா பார்த்துக்குங்க.. தூக்கில் தொங்கிய திவ்யா.. கோவை பரிதாபம்!என்னை மன்னிச்சிடுங்க.. சீசரை நல்லா பார்த்துக்குங்க.. தூக்கில் தொங்கிய திவ்யா.. கோவை பரிதாபம்!

என்ன காரணம்

என்ன காரணம்

அதேபோல் டெல்லியில் தீபாவளி அன்று தடையை மீறி பலர் வெடி வெடித்தனர். இதனால் மொத்தமாக டெல்லியே புகை மண்டலமாக மாறியது. அதேபோல் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பயிர்கள் எரிக்கப்படுவதும் டெல்லியில் பெரிய புகை மண்டலத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிக மோசம்

மிக மோசம்

தற்போது டெல்லியில் காற்றின் நிலை மோசமான நிலை + (severe plus) அடைந்து இருக்கிறது. தீபாவளிக்கு பிறகு டெல்லியில் வரிசையாக காற்று அதிக அளவில் மாசுபட்டது. தற்போது அங்கு காற்று சுவாசிக்க முடியாத நிலையில் கடந்த 48 மணி நேரமாக இருக்கிறது.

என்ன அவசர நிலை

என்ன அவசர நிலை

இதனால் தற்போது டெல்லியில் மருத்துவ அவசர நிலை எனப்படும் medical emergency அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இயங்கும் டெல்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாயு கூடம் போல டெல்லி இருக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

என்ன தடை

என்ன தடை

இதையடுத்து டெல்லியில் உடனடியாக கட்டுமான பணிகள் எல்லாம் நிறுத்தப்படுகிறது. அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகள் இயங்க முடியாது. மேலும் வெடி வெடிக்க, குப்பைகளை எரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாரிகள் தீவிரமாக களமிறங்கி மாசு குறித்து கண்காணித்து வருகிறார்கள்.

English summary
Medical Emergency imposed in Delhi after the air remains Severe Plus for 48 hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X