500 காண்டம்-400 மதுபாட்டில் பறிமுதல்.. விபச்சார வழக்கில் மேகாலயா பாஜக துணை தலைவர் கைது..முழு பின்னணி
டெல்லி: மேகாலயாவில் விபசார விடுதி நடத்தியதாக கூறி அம்மாநில பாஜக துணை தலைவர் பெர்னார்ட் என் மார்க் கைதான நிலையில் அவரது பண்ணை வீட்டில் இருந்து 500 காண்டம், 400 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
மேகாலயா மாநிலம் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் துரா பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் இரவு நேரத்தில் துரா பகுதியில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போது பண்ணை வீட்டில் ஏராளமான அறைகள் இருந்தன.

விபசாரம் - கைது
அதாவது பண்ணை வீடானது 3 மாடியாக அமைந்து இருந்தது. இதில் முதல் தளம், 2வது தளத்தில் ஏராளமானவர்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் தான் சில அறைகளில் விபச்சாரம் நடப்பது தெரியவந்து. இதையடுத்து போலீசார் 23 பெண்கள், 73 இளைஞர்களை கைது செய்தனர். அதோடு 4 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 6 பேரை மீட்டனர். இதையடுத்து இந்த பண்ணை வீடு யாருக்கு சொந்தமானது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

பாஜக துணை தலைவரின் பண்ணை வீடு
விசாரணையில் மேகாலயா மாநில பாஜக துணை தலைவரான பெர்னார்ட் என் மரக் என்பவருக்கு சொந்தமானது என்பதும் அவர் கேரா ஹில்ஸ் பகுதியில் மாவட்ட கவுன்சிலராக இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே பண்ணை வீட்டில் போலீசார் சோதனை நடத்தி கைது செய்திருப்பதை அறிந்த அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தொடர்ந்து தேடினர்.

உத்தர பிரதேசத்தில் கைது
இந்நிலையில் தான் பெர்னார்ட் என் மரக் உத்தர பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருப்பதை போலீசார் அறிந்தனர். இதையடுத்து நேற்று உத்தர பிரதேசத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். பண்ணை வீடு என்ற பெயரில் விபசார விடுதி நடத்தியதாக கூறி உத்தர பிரசேத்தின் ஹாபூர் மாவட்டத்தில் பதுங்கிய அவரை மேகாலயமா போலீசார் கைது செய்தனர்.

500 காண்டம் பறிமுதல்
இந்நிலையில் தான் பண்ணை வீட்டில் நடந்த சோதனை குறித்து போலீசார் சில விபரங்களை கூறியுள்ளனர். அதன்படி சோதனை வேளையில் பண்ணை வீட்டில் 400 மதுபான பாட்டில்கள், 500 ஆணுறைகள் இருந்தன. பெட்டியில் தனித்தனியே இருந்த இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 'ரிம்பு பாகன்' என்ற பெயர் கொண்ட பண்ணை வீட்டில் இருந்து கார் உள்பட 27 வாகனங்கள் இருந்தன. 8 டூவீலர்கள் இருந்தன. 10க்கும் அதிகமான கார்கள் நின்றன. இந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications