தகுதிநீக்க நோட்டீஸ் எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பை பாதிக்கும்! சிவசேனாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி: மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து சிவசேனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எம்எல்ஏக்களின் தகுதிநீக்க நோட்டீஸ் என்பது நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும். நம்பிக்கை வாக்கெடுப்புக்கும், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது'' என உச்சநீதிமன்றம் கேட்டுள்ள நிலையில் தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் அமைச்சரான ஏக்நாத் ஷிண்டேவுடன் அணி திரண்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கியுள்ளனர்.

தகுதிநீக்க நோட்டீஸ்
இதனால் மகாராஷ்டிராவில் மகா விகாஷ் அகாடி கூட்டணியின் ஆட்சி கவிழும் நிலை உள்ளது. ஏக்நாத் ஷிண்டேவுடன் உள்ள 16 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை மகாராஷ்டிரா துணை சபாநாயகர் வழங்கினார். இதற்கு தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதனை எதிர்த்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது. 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வேளையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறி இருப்பது சட்டவிரோதமானது என சிவசேனா கொறாடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு எனும் ஆளுநர் உத்தரவை எதிர்க்கும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சிவசேனா வாதம்
இதில் வழக்கு தொடர்ந்தவர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினார். அப்போது அவர், பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வெறும் ஒரே ஒரு நாள்தான் காலஅவகாசம் வழங்குகிறார் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்த உடன் இந்த அறிவிப்பு வெளியாகிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் யார் வாக்களிக்க முடியும். முடியாது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என சிவசேனா தரப்பில் வாதமாக வைக்கப்பட்டது.

எம்எல்ஏவாக கருத முடியாது
மேலும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிவிட்டால் குறிப்பிட்ட நபரை எம்எல்ஏவாக கருத முடியாது. எனவும் தகுதிநீக்க நோட்டீஸ் நிலுவையில் இருக்கும் போது அதிருப்தி எம்எல்ஏக்கள் எப்படி வாக்களிக்க முடியும்?. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் தகுதி நீக்க நடவடிக்கைக்கு அனுமதி தேவை. இதனால் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கஉச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் ஒரு ஆளுநர் என்பவர் அம்மாநில அமைச்சரவை குழுவின் அறிவுரைகளுக்கு கட்டுப்படக்கூடியவர். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைப்படி நடக்ககூடாது என வாதிடப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும்?
இதைக்கேட்ட நீதிமன்றம் எம்எல்ஏக்கள் மீதான தகுதிநீக்க நோட்டீஸ் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்படி பாதிக்கும்? என கேள்வி எழுப்பியது. மேலும் நிலுவையில் உள்ள தகுதி நீக்க நோட்டீஸ் வழக்கிற்கும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் என்ன சம்பந்தம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து தொடர்ந்து வாதம் நடந்து வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications