டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னிலை வகிக்கும் பாஜக ஆளும் மாநிலங்கள்.. புள்ளி விவரம்

Google Oneindia Tamil News

டெல்லி:தடுப்பூசி செலுத்துவதில் நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடியில் சிக்கித் தவித்த உலக நாடுகள் நிம்மதிப் பெருமூச்சு விடும் நிலையில், ஓமிக்ரான் திரிபு வகை வைரஸ் காரணமாக மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதையடுத்து அனைத்து உலக நாடுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன இந்தியாவிலும் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியா வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது..

தடுப்பூசி செலுத்துவதை மேலும் துரிதப்படுத்த வேண்டும், பொதுமக்கள் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது . இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதில் நாட்டில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பு ஊசி 90 சதவீத மக்களும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை 50 சதவீத மக்களும் செலுத்தி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 'நானே வீதி வீதியாக சென்று ஆய்வு நடத்துவேன்.. ஜாக்கிரதை.. ' அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கறார் 'நானே வீதி வீதியாக சென்று ஆய்வு நடத்துவேன்.. ஜாக்கிரதை.. ' அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கறார்

காங்கிரஸ்

காங்கிரஸ்

காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதல் தடுப்பூசியை கூட 90 சதவீத மக்கள் போட்டுக் கொள்ளவில்லை எனவும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை 50 சதவீத கூட தொடவில்லை என தகவல்கள் தகவல்கள் வெளியாகி உள்ளன
காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்கள்

பஞ்சாப் - தமிழகம்

பஞ்சாப் - தமிழகம்

இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 72.5 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது . இரண்டாவது டோஸ் தடுப்பூசி உற்பத்தி 32.8 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திமுக ஆட்சி செய்யும் தமிழகத்தில் முதல் டோஸ் தடுப்புஊசி 78.1 சதவீத மக்களுக்கும் , இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 42.65 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஜார்கண்ட், சத்தீஸ்கர்

ஜார்கண்ட், சத்தீஸ்கர்

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா , காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறும் ஜார்க்கண்டில் முதல் டோஸ் தடுப்பு ஊசி 66.2 சதவீதம் மக்களும் , இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியை 30.8 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளனர்.. காங்கிரஸ் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் டோஸ் 83.2% பேருக்கும், 2-வது டோஸ் 47.2 சதவீதம் மக்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 84.2% பேர் முதல் டோஸையும், 46.9 சதவீதம் பேர் 2-வது டோஸையும் செலுத்தியுள்ளனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள்

பாஜக ஆளும் மாநிலங்கள்

திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநிலங்களில் தடுப்பூசி சதவீதம் குறைவாக உள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசம் கோவா மாநிலங்களில் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்ட நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 91.9 சதவீதம் பேருக்கும், கோவாவில் 87.9 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 93.5 சதவீத மக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசியும் 70.3 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசியும் போடப்பட்டுள்ளது. இதேபோல மத்திய பிரதேசம் அஸ்ஸாம் திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களிலும் சுமார் 90 சதவீதத்திற்கும் மேல் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

English summary
The BJP-ruled states are the largest in the country in terms of corona vaccination. In BJP-ruled states, the first dose was reported by 90 percent of people and the second dose by 50 percent. But it has been revealed that even the first dose of the vaccine has not reached 90 percent in states ruled by Congress and non-Congress parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X