30 நாடுகளில் 700 பேர் பாதிப்பு! தீயாய் பரவும் குரங்கு அம்மை! இப்படி கூட பரவும்! நிபுணர்கள் வார்னிங்!
டெல்லி : பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 700க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், மருத்துவ கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனாவுக்குப் பிறகு உலக மக்களை மீண்டும் ஒரு அச்சுறுத்தலில் ஆழ்த்தும் விதமாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது மேற்கத்திய நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது.
தற்போது ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் போன்றவற்றில் இதன் பாதிப்பு திடீரென அதிகரித்து வரும் நிலையில், கொரோனா போன்ற ஒரு சுகாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவ நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

குரங்கு அம்மை பாதிப்பு
இந்நிலையில் உலக நாடுகளை அச்சுறுத்தி மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தற்போது பிரான்ஸ், அமெரிக்கா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் 700க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பரவியுள்ள நிலையில், மருத்துவ கழிவுகள் மூலமும், நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்தும் மனிதர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி பிரான்ஸ் நாட்டில் குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் பரவல்
பிரான்சில் மட்டும் தற்போது மொத்தமாக இதுவரை 51 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனையடுத்து உலகளவில் மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 700 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் இதுவரை 22 முதல் 63 வயது கொண்ட ஆண்களுக்கு மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிர்க்கு ஆபத்தில்லை
குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள மக்களில் இதுவரை யாரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை எனவும் பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தரும் தகவலை தெரிவித்துள்ளனர். இதேபோல கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்த அமெரிக்காவில் இதுவரை 21 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல கனடாவில் இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

மக்களுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் மங்கு பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோயானதூ மருத்துவ கழிவுகள் மூலம் கூட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதோடு, தற்போதைய சூழலில் அதற்கும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளனர். ஆங்காங்கே இது போன்ற ஏற்படும் பாதிப்புகளை கூர்ந்து கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக தொலைநோக்கு திட்டம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications