கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து எப்படி மற்றவர்களுக்கு பரவுகிறது?.. மோடியின் விழிப்புணர்வு வீடியோ
டெல்லி: கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து எப்படி மற்றவர்களுக்கு பரவுகிறது என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது கொரோனா வைரஸ். இதை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு போராடி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் எப்படி எல்லாம் பரவ வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் சிறிய முன்னெச்சரிக்கைகளும் பெரிய அளவில் பயனளிக்கும். ஏராளமான உயிர்களை காக்கும். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தேன். உங்களிடமும் அது போன்ற வீடியோக்கள் இருந்தால் மக்களுக்கு பகிருங்கள். கொரோனா பரவுவதை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

அவற்றை #IndiaFightsCorona இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்யலாம். இதுகுறித்து அந்த வீடியோவில், ஒருவர் லிப்டினுள் ஏறுகிறார். அங்கு அவர் தும்மும்போது கைகளை கொண்டு மறைக்கிறார். பின்னர் அந்த லிப்டின் பட்டனை பிரஸ் செய்கிறார். அவர் போனவுடன் ஆன்லைன் உணவு டெலிவரி பாய் வருகிறார்.
Minute precautions can make monumental impacts and save many lives.
— Narendra Modi (@narendramodi) March 21, 2020
Saw this interesting video on social media. If you have such videos that can educate people and spread awareness on battling COVID-19, please do so using #IndiaFightsCorona. pic.twitter.com/OfguKRMs1g

அவர் ஏற்கெனவே கிருமி தொற்றுள்ள அதே லிப்ட் பட்டனை அழுத்துகிறார். அவர் கையில் கிருமி பரவுகிறது. அது போல் அவரிடம் இருந்து உணவை வாங்கும் ஒரு பெண்ணுக்கு பரவுகிறது. அந்த பெண்ணிடம் இருந்து இன்னொரு பெண்ணுக்கு, அவரிடம் இருந்து இரு ஆண்களுக்கு என தொடுதல் மற்றும் பொருட்கள் மூலம் பரவுகிறது.

எனவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை மோடி தெரிவித்துள்ளார். தும்மும் போதும் இருமும்போதும் கைகுட்டை கொண்டு முகத்தை மறைக்க வேண்டும். அவ்வப்போது கைகளை சோப் போட்டு கழுவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
