Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் நடத்துவது சத்யாகிரக போராட்டமல்ல.. விளாசிய ஜே பி நட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் மூன்றாவது நாளாக விசாரணை நடத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் எம்.பிக்கள், நிர்வாகிகள் என பலரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் "நாட்டைக் காக்கும் சத்யாகிரக போராட்டமல்ல" என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், "காங்கிரஸ் கட்சிக்காரர்களின் போராட்டத்தின் நோக்கம் பலிக்காது. அவர்கள் உண்மையை மறைக்க போரடுகின்றனர்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

 நேஷனல் ஹெரால்டு

நேஷனல் ஹெரால்டு

நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் 5,000 பேரை பங்குதாரர்களாக இணைந்து கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார். இந்த பத்திரிகையை அசோசியேட்டட் ஜர்னல்ஸ் என்ற நிறுவனம்(AJL) நடத்தி வந்தது. அப்போது இது எந்த ஒரு தனிநபருக்கும் சொந்தமானதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையாக செயல்பட்டு வந்தது. இந்த பத்திரிகையின் கடன் சுமை ரூ.90 கோடிக்குமேல் அதிகரித்ததால், கடந்த 2008-ம்ஆண்டு இந்த பத்திரிகை மூடப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு இதன் பங்குதாரர்களின் எண்ணிக்கை 1057-ஆக சுருங்கியது.

யங் இந்தியா

யங் இந்தியா

ஏஜெஎல் நிறுவனத்தின் கடனை அடைத்துமீண்டும் பத்திரிகையை தொடங்க, காங்கிரஸ் கட்சி சார்பில் கடன் அளிக்கப்பட்டது. அதன் பின் 'யங் இந்தியா' என்ற நிறுவனம், கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு 76 சதவீத பங்குகள் உள்ளன. எஞ்சிய 24 சதவீத பங்குகள் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கர் பெர்னான்டஸிடம் உள்ளன. இந்நிலையில் யங் இந்தியா நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டில் ரூ.50 லட்சத்தை செலுத்தி, ஏஜெஎல் நிறுவனத்தின் பல கோடி மதிப்பிலான சொத்துகளின் பங்குகளை கையகப்படுத்தியதாக குற்றச்சாட்டு மேலெழுந்தது.

வழக்கு

வழக்கு

இது தொடர்பாக பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அமலாக்கத்துறை கடந்த 2014-ம் ஆண்டு யங் இந்தியா நிறுவனம் மீது நிதி மோசடி விசாரணையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தியது. பின்னர் சோனியா காந்தியிடமும் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது, "காங்கிரஸ் கட்சியினர் நடத்துவது நாட்டை காக்கும் சத்யாகிரக போராட்டமல்ல. இது சோனியாக காந்தியின் குடும்பத்தை காக்க நடத்தப்படும் போராட்டமாகும். விசாரணைக்கு காந்திகள் (சோனியாகாந்தி, ராகுல்காந்தி) பதில் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் என நினைக்கின்றார்கள்" என்று கூறினார்.

மேலும், "ஒரு குடும்பத்தை சட்டத்திற்கு அப்பாற்பட்டு வைத்திருக்க காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நடத்தும் போராட்டம் பலிக்காது. உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறையின் வரம்பை வரையறை செய்துள்ளது" என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், பாஜக தேசிய தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+