Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வினோத் ராய் யாருக்காக செய்தார்? நீங்க விசாரிங்க.. இல்லைனா புதிய அரசு விசாரிக்கும் - ஆ.ராசா பொளேர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : வினோத் ராய் அதை யாருக்காகச் செய்தார் என இந்த அரசாங்கம் விசாரிக்க வேண்டும், இந்த அரசு அதற்கு முன்வராவிட்டால், புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் விசாரணை நடத்த வேண்டும் என ஆ.ராசா எம்.பி தெரிவித்துள்ளார்.

5ஜி ஏலத்தில், எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி குறைவாக ஏலம் போயிருப்பதால், 2ஜி விவகாரத்தைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

2ஜி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் வாதாடி விடுதலை பெற்ற திமுக எம்.பி ஆ.ராசா, 5ஜி ஏலம் குறித்துப் பேசியிருக்கிறார். இந்த முறைகேட்டை மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஆ.ராசா.

5ஜி ஏலம்

5ஜி ஏலம்

5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலம் விட்டது தொலைத் தொடர்புத் துறை. அதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி. 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏலம் நிறைவடைந்தது.

1.50 லட்சம் கோடி

1.50 லட்சம் கோடி

5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பாக 4.3 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் 51,236 மெகாஹெர்ட்ஸ் (71% மட்டும்) 1 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு மட்டுமே ஏலம் போயுள்ளது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 5ஜி ஏலத்தில் ரூ. 2.8 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கேள்விகளால் துளைத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

கேள்விகளால் துளைத்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் 2ஜி அலைக்கற்றை ஏலத்தையும் 5ஜி அலைக்கற்றை ஏலத்தையும் ஒப்பிட்டு பாஜக அரசை கேள்விகளால் துளைத்தெடுத்து வருகின்றன. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக ஆ.ராசா மீது குற்றம்சாட்டப்பட்டது. அதை பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விவாதமாக்கின. காங்கிரஸ் கூட்டணி அரசு தோற்றதற்கு இந்த முறைகேடு புகாரும் முக்கியமான காரணம்.

முறைகேடாக கருதப்படுமா?

முறைகேடாக கருதப்படுமா?

2ஜி முறைகேடு வழக்கில் அன்றைக்கு தொலைத் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா சிறை சென்றார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது நீதிமன்றத்தில் வாதாடினார். பின்னர், முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் ஆ.ராசாவை விடுதலை செய்தது. இந்நிலையில், 5 ஜி ஏலம் குறைவான விலைக்குச் சென்றுள்ளதால், இதனையும் முறைகேடு எனக் கருதி, அஷ்வினி வைஷ்ணவ் மீது வழக்குத் தொடரப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆ.ராசா பேட்டி

ஆ.ராசா பேட்டி

5ஜி ஏலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா, "5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. 2ஜி, 3ஜி-யோடு ஒப்பிடும்போது 5ஜி அலைக்கற்றை ரூ. 5 முதல் 6 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகும் என மத்திய அமைச்சர் கூறியிருந்தார். ஆனால் இப்போது 1.50 லட்சம் கோடி மட்டுமே ஏலம் நடந்துள்ளது.

மிகப்பெரிய மோசடி

மிகப்பெரிய மோசடி

2ஜியில் 30 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ட்ராய் எனப்படும் ஒழுங்குமுறை ஆணையம் ஏலத்திற்கு பரிந்துரைத்தபோது 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது என அன்றைக்கு சி.ஏ.ஜி வினோத் ராய் கூறினார். ஆனால் இன்று 51 ஜிகா ஹெர்ட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. இந்த இமாலய முறைகேடு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

புதிய அரசு விசாரணை நடத்த வேண்டும்

புதிய அரசு விசாரணை நடத்த வேண்டும்

2ஜிக்கும் 5ஜிக்கும் இடையே எவ்வளவு திறன் வேறுபாடு உள்ளது. ஆனால், குறைவான தொகைக்கு ஏலம் போயுள்ளது. அன்றைக்கு 2ஜியால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. வினோத் ராய் அதை யாருக்காகச் செய்தார்? எவ்வளவு மோசடி என இந்த அரசு விசாரிக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் முன்வராவிட்டால், இப்போதைய அரசு மாறுகிறபோது, புதிய அரசு அமைந்தவுடன் அவர்கள் விசாரணை நடத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+