'இந்தியாவில் 5ஜி இணைய சேவை.. இந்த ஆண்டே அலைக்கற்றை ஏலம்..' நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லி: 2025-ம் ஆண்டுக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வசதி செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 5ஜி சேவை வழங்க அலைக்கற்றைகள் நடப்பாண்டில் ஏலம் விடப்படும் என்றும் 5ஜி இணைய சேவை விரைவில் தொடங்கப்படும்' என்றும் அவர் கூறினார்.
Recommended Video

நாடாளுமன்றத்தில் 2022- 23 மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். நான்காவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தொடர் அறிவிப்புகள்
முழுவதும் டிஜிட்டல் முறையிலான காகிதம் அல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திரட்டி அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இணைய சேவைகள் குறித்து பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

விரைவில் 5ஜி சேவை
அதாவது நாட்டில் 5ஜி சேவை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் இணைய இணைப்பு வசதி செய்யப்படும் என்று கூறிய நிர்மலா சீதாராமன் தனியார் தொலைத்தொடர்பு வழங்குநர்களால் 5G மொபைல் சேவைகளை வெளியிடுவதற்கு தேவையான ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 இல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மலிவு விலையில் பிராட்பேண்ட்
கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் மலிவு விலையில் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் தொடர்புகளை செயல்படுத்தும் வகையில், PLI திட்டத்தின் ஒரு பகுதியாக, 5G சுற்றுச்சூழல் அமைப்பிற்காக, வடிவமைப்பு தலைமையிலான உற்பத்திக்கான திட்டம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இணைய வசதி மிகவும் முக்கியம்
நமது நாட்டில் இப்போது 4ஜி இணைய சேவை இருக்கும் நிலையில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளது பல்வேறு வரவேற்பை பெற்றுள்ளது. இன்றைய கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் கல்விக்கு கூட இணைய வசதி மிகவும் தேவையாக உள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட இணைய வசதி மிகவும் முக்கியம்.

குக்கிராமங்களில் வளர்ச்சி
தற்போது குக்கிராமங்களில் கூட இணைய வசதி மேம்பட்டு வரும் நிலையில் 5ஜி சேவை தொடங்கப்படும்கூட நெட்வொர்க் நிலை இப்போது இருப்பதை விட வேகமாக இருக்கும். இணைய வளர்ச்சியால் கிராமப்புற வளர்ச்சியும் அதிமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications