ஆப்டிகல் இல்யூஷன்: இங்கே ஒரு பறவை இருக்கு.. ஒரு சிலரே கண்டுபிடிச்சு இருக்காங்க.. உங்களால் முடியுமா?
டெல்லி: இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பறவை ஒன்று மறைந்திருக்கிறது. ஒருசிலராலே இந்த பறவையை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என சோதித்து பாருங்கள்.
நமது கண்களை குழப்பி மூளையை கசக்கி பிழிய வைக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது மனதிற்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கக் கூடியது என்றால் மிகையல்ல.
புத்திக்கூர்மையையும் நமது கவனிப்புத்திறனையும் பரிசோதிக்கும் வகையில் சவால் மிக்கதாக இல்யூஷன் படங்கள் அமைந்து இருப்பதால் நெட்டிசன்கள் மத்தியில் இத்தகைய இல்யூஷன் படங்களுக்கு தனிவரவேற்பு உள்ளது.

மனதை ஒருமுகப்படுத்தினால்
பொதுவாக இல்யூஷன் படங்கள் என்பது ஒரு ஒளியியல் மாயை ஆகும் ஆகும். வெளிப்படையாகவே, நேரடியாகவே விடைகள் இருக்காது. கூர்ந்து கவனித்தாலும் மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே இத்தகைய படங்களுக்கு விடையை கண்டுபிடிக்க முடியும். இதனால், விடையை கண்டுபிடித்துவிட்டு தங்கள் நட்பு வட்டாரங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு சவால் விடுப்பது...

படத்தில் மறைந்து இருக்கும் பறவை
விடையை கண்டுபிடிக்கவில்லை என்றால் ஜாலியாக கலாய்ப்பது என நெட்டிசன்களுக்கு சிறந்த பொது பொழுது போக்காவும் இல்யூஷன் படங்கள் அமைந்துள்ளன. அந்த வகையிலான ஒரு இல்யூஷன் படத்தை இன்று நாம் பார்க்க இருக்கிறோம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பறவை மறைந்து இருக்கிறது. அந்த பறவை எங்கு மறைந்துள்ளது என்பதை கண்டுபிடிப்பதே உங்களுக்கான டாஸ்க். அதற்காக மணிக்கணக்கில் எல்லாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

7 வினாடிகளில்..
வெறும் 7 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். என்ன சவாலுக்கு ரெடியா..? கற்களும் புதர்களும் நிறைந்து காணப்படும் இந்த படத்தில் பறவை அமர்ந்துள்ளது. அதை 7 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கான டைம் எடுத்துக்கொள்ளுங்கள்.. ஒகே. பலரும் பறவையை கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம். 7 நொடிகளுக்குள் கண்டு பிடிச்சால் நீங்கள் உண்மையிலேயெ கிராட் தான்.

புதர்களில் அமர்ந்து இருக்கும்
கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கவலை வேண்டாம். கண்டுபிடிக்காதவங்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து எளிதாக கண்டுபிடித்து விடலாம். முதல் டிப்ஸ்: பறவை என்றதும் புதர்களில் அமர்ந்து இருக்கும் என்று எண்ணி தேடிக்கொண்டு இருக்காதீர்கள்..அப்படி தேடினால் 7 நொடி அல்ல 7 நிமிடம் ஆனாலும் பறவை தென்படாது. கற்கள் மீதுதான் பறவை அமர்ந்துள்ளது.

வலது பக்கம் உங்கள் பார்வையை
இந்த முதல் டிப்ஸில் பலரும் கண்டுபிடித்து இருக்கலாம் என்று நினைக்கிறோம். அப்படி கண்டுபிடிக்காவிட்டாலும் இன்னொரு எளிதான டிப்ஸ் தர்றோம். அதை வச்சி ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சிடலாம். படத்தின் இடது பக்கமாகத்தான் பறவை மறைந்துள்ளது. எனவே வலது பக்கம் உங்கள் பார்வையை செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது
தற்போது அனைவரும் கண்டுபிடித்து இருக்க வாய்ப்புள்ளது. பறவை மறைந்து இருக்கும் இடம் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது சரியாகத்தான் கண்டுபிடிச்சு இருக்கீங்களா? என டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications