டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மதநிந்தனை.. சொல்லசொல்ல கேட்காத ‛விக்கிப்பீடியா’ முடக்கம்.. பாகிஸ்தான் போட்ட உத்தரவு.. என்னாச்சு?

பாகிஸ்தானின் விக்கிப்பீடியா தகவல் தளம் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் விக்கிப்பீடியாவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: இஸ்லாமிய மத நம்பிக்கைக்கு எதிரான கருத்து விக்கிப்பீடியாவில் இடம்பெற்றிருந்தது. இதனை நீக்க பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில் விக்கிப்பீடியா கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் அந்த நாட்டில் விக்கிப்பீடியாவை பாகிஸ்தான் அதிரடியாக முடக்கி உள்ளது.

உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்தும் இணையதள தகவல் மையமாக விக்கிப்பீடியா உள்ளது. புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் உள்பட பல்வேறு தனிநபர்கள் பற்றிய விபரங்கள் மக்கள் அறியும் வகையில் இதில் உள்ளன.

இதனால் தினமும் பல கோடி பேர் விக்கிப்பீடியாவை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் தினமும் ஏராளமானவர்கள் விக்கிப்பீடியா மூலம் தகவல்களை அறிந்து வருகின்றனர்.

அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி.. மிருகங்களிடம் வீசிவிட்டது! பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்.. என்ன நடந்தது அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி.. மிருகங்களிடம் வீசிவிட்டது! பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்.. என்ன நடந்தது

விக்கிப்பீடியா முடக்கம்

விக்கிப்பீடியா முடக்கம்

இந்நிலையில் தான் இஸ்லாமிய மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட அண்டை நாடான பாகிஸ்தானில் விக்கிப்பீடியா தகவல் தளம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடாக அறியப்படும் பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் மதவிவகாரங்களுக்கு எதிரான சட்டங்களை அந்நாட்டு அரசு கடுமையாக்கியது. இதில் அதிகபட்சமாக தூக்குதண்டனை கூட விதிக்கப்படும்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இந்நிலையில் தான் விக்கிப்பீடியாவில் இஸ்லாமிய மதம், கடவுளுக்கு எதிரான மற்றும் அவதூறு கருத்துக்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனை 48 மணிநேரத்தில் நீக்கம் செய்ய வேண்டும் பாகிஸ்தான் டெலிகாம் ஆத்தாரிட்டி உத்தரவிட்டு இருந்தது. ஆனால் விக்கிப்பீடியா இதனை கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் மதநிந்தனை செய்ததாக கூறி பாகிஸ்தான் தொலைதொடர்புத்துறை விக்கிப்பீடியாவை பாகிஸ்தானில் முடக்கம் செய்துள்ளது.

 மீண்டும் செயல்படுவது எப்போது?

மீண்டும் செயல்படுவது எப்போது?

இதனால் விக்கிப்பீடியா தனது சேவையை பாகிஸ்தானில் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மதநிந்தனை கருத்துக்கள், கடவுள், மதம் தொடர்பான அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட்ட பின்னரே விக்கிப்பீடியா இணையதளம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு நடந்தது என்ன?

முன்பு நடந்தது என்ன?

பாகிஸ்தான் மதநிந்தனை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக கருதப்படும். அதன்படி தான் தற்போது விக்கிப்பீடியா முடக்கம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இதுபோன்ற விவகாரங்களில் பேஸ்புக், யூடியூப் ஆகியவை முடக்கம் செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் மதநிந்தனை செய்பவர்கள் மீது கொடூர தாக்குல், கொலைகள் கூட நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Anti-Islamicism was featured on Wikipedia. Wikipedia did not agree with Pakistan's request to remove it. In this case, Pakistan has effectively blocked Wikipedia in that country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X