'சரணடைந்த மோடி' என எதிரொலித்த கோஷம்! பிரதமர் மோடி உரை ரத்து... மக்களவை ஒத்திவைப்பு!
டெல்லி: நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி பதிலுரை நிகழ்த்த இருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக பிரதமர் வரவில்லை. மேலும் அவர் வருவதற்குள் சபை ஒத்திவைக்கப்பட்டதால் மோடி உரை நிகழ்த்தவில்லை. இதனையடுத்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதன்படி ஜனவரி 28ல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார்.
அதன்பிறகு கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிக்கள் பேசி வருகின்றனர்.

மோடி உரை
அந்த வகையில் இன்று மாலையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பதிலுரை வழங்க இருந்தார். பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு நாடாளுமன்றம் வருவதாக கூறப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அமளி
ஆனால் அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோடிக்கு எதிராக குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். மோடி சரணடைந்துவிட்டார் என்று கூறி கோஷமிட்டனர். சபையின் மையப்பகுதிக்கு பதாகைகளுடன் வந்து அமளியில் ஈடுபட்டனர். மோடி இருக்கை உள்பட மத்திய அமைச்சர்கள், எம்பிக்களின் இருக்கை வரை சென்றனர். இதனால் லோக்சபா ஒத்திவைககப்பட்டது. பிரதமர் மோடி சபைக்கு வருவதற்கு முன்பாகவே சபை ஒத்திவைக்கப்பட்டால் அவர் உரையாற்றவில்லை.
ஒத்திவைப்பு
இதையடுத்து பிரதமர் மோடி உரை நிகழ்த்தவில்லை. நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக லோக்சபா தொடர்ந்து கூச்சல் குழப்பத்தால் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்றும் எதிர்க்கட்சியினரின் அமளியால் லோக்சபா முடங்கியது.
ராகுலுக்கு என்ன நடந்தது?
முன்னதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்தியா - சீனா இடையேயான டோக்லாம் விவகாரம் குறித்து முன்னாள் ராணுவ தளபதி நரவனே நினைவு குறிப்பில் உள்ளதாக கூறி பேசியதற்கு ஆளும் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து ராகுல் காந்தி பேச அனுமதிக்கவில்லை.
ராகுல் காந்தி சபை விதியை மீறுவதாக மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு கூறினர்.
இதனால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முன்தினம் சபை முடங்கியது. அதன்பிறகு நேற்று நடந்த சபையிலும் கூட ராகுல் காந்தி பேச அனுமதிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சி எம்பிக்கள் கூச்சல், குழப்பம் செய்தனர். 3 முறை சபை ஒத்திவைக்கப்பட்டது.
8 எம்பிக்கள் சஸ்பெண்ட்
மேலும் சில எம்பிக்கள் காகிதத்தை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசினர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹிபி ஈடன், அமரிந்தர் சிங் ராஜா வாரிங், விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, பிரசாந்த் யாதவ் ராவ் படோலே மற்றும் சாமலா கிரண் குமார் ரெட்டி, டீன் குரியகோஸ், மதுரை எம்பி சு வெங்கடேசன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதன்பிறகு லோக்சபா ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலை 11 மீண்டும் தொடங்கி விவாதம் நடைபெற்று வந்தது. இருப்பினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டார் என்று முழக்கமிட்டனர். தொடர் அமளி காரணமாக அவை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications