பெகாசஸ் : விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய முடியாது... உச்சநீதிமன்றத்துடன் மத்திய அரசு மல்லுக்கட்டு!
டெல்லி: பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெகாசஸ் விவகாரத்தில் வல்லுநர் குழுவை அமைக்க தயாராக இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் அரசு தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பலரது செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
மத்திய அரசு உரிய விளக்கம் தரக் கோரி ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத்தை முடக்கின. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன

9 வழக்குகள்
மேலும் மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக 9 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஏற்கனவே ஒரு பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மத்திய அரசுக்கு எதிரான அத்தனை குற்றச்சாட்டுகளும் ஆதாரங்கள் இல்லாமல் முன்வைக்கப்படுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பத்திரிகை தகவல்கள் அடிப்படையிலானவை. இந்த வழக்குகளும் யூகங்கள் அடிப்படையில் தொடரப்பட்டவை. தேவைப்பட்டால் வல்லுநர் குழுவை அமைக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. அப்போது மத்திய அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விரிவான அறிக்கை இல்லை
இதனையடுத்து கடந்த 7-ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா விசாரணையை ஒத்திவைக்க கோரியிருந்தார். இதனிடையே இன்று பெகாசஸ் வழக்கு விசாரணை மீண்டும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா கூறியதாவது: யாருடைய செல்போன்களையும் ஒட்டு கேட்கவே இல்லை என ஏற்கனவே நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறோம். இது ஒரு முக்கியமான பிரச்சனை. அதனால் ஏற்கனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம். வல்லுநர் குழுவையும் அமைக்க உள்ளோம். இந்த குழுவில் அரசு சார்பில் யாரும் உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேவை இல்லை. இவ்வாறு துஷார் மேத்தா கூறினார்.

பொதுவெளியில் சொல்ல முடியாது
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, கடந்த முறை விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய சொல்லியிருந்தோம். ஆனால் இப்போது இப்படி சொல்கிறீர்களே? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துஷார் மேத்தா, பெகாசஸ் பயன்படுத்தப்பட்டடதா? இல்லையா என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் பிரமாணப் பத்திரங்கள் மூலம் விவாதிக்க முடியாது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்தல் போன்றவற்றை கண்டறிய செல்போன்களை ஒட்டுக் கேட்க சட்டத்தில் இடம் இருக்கிறது என்றார். மேலும் என்ன சாப்ட்வேர் பயன்படுத்தப்பட்டது என்பதெல்லாம் பிரமாணப் பத்திரத்தில் சொல்ல வேண்டியது இல்லை. அதை வல்லுநர் குழு பார்த்து கொள்ளும். வல்லுநர் குழு முன்பாக அனைத்து விவரங்களையும் நான் தெரிவிப்போம். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த விவரங்களை பொதுவெளியில் வைக்கவும் முடியாது என்றார் துஷார் மேத்தா.
Recommended Video

மத்திய அமைச்சரின் அறிக்கை
இதையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யா காந்த் ஆகியோர், தேச பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களுக்குள் நாங்கள் செல்ல விரும்பவில்லை. மனுதாரர்கள் எங்கள் முன்னர் வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். அதனால்தான் விரிவான பிரமாண பத்திரத்தை கேட்கிறோம். சட்டப்படி நடந்ததா? இல்லை சட்டவிரோதமாக ஒட்டுகேட்பு நடந்ததாக நீங்கள் சொல்ல வேண்டும் என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையை துஷார் மேத்தா வாசித்தார். அதனை குறிப்பிட்டு கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தாக்கல் செய்த அறிக்கையிலேயே ஒட்டுகேட்புக்கு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என சொல்லி இருக்கிறார்.

மத்திய அரசு நிலையால் கபில் சிபல் அதிர்ச்சி
அத்துடன் அரசாலோ அல்லது வேறு ஒரு ஏஜென்சியாலோ அப்படி ஒரு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சட்டப்படியானது; விசாரணை தேவை என்கிறார் மத்திய அமைச்சர் எனவும் சுட்டிக்காட்டினார். மேலும் மத்திய அரசு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய விரும்பவில்லை என்கிறது மத்திய அரசு ஆகையால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்கத்தான் வேண்டும் என்றார். இதன்பின்னர் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கபிசிபல், நீதிமன்றத்திடம் எதனையுமே சொல்லமாட்டோம் என மத்திய அரசு கூறுவது நம்பவே முடியாத ஒன்றாக இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் உண்மையை அறிய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? இஸ்ரேலின் என்.எஸ்.ஓ.-பெகாசஸ் மீது வழக்கு பதிவு செய்ததா? நாட்டின் சாதாரண குடிமகன்களை பெகாசஸ் உளவு பார்ப்பது என்பது மிகவும் மோசமான செயல். பெகாசஸ் மென்பொருள் சட்டவிரோதமானது. ஆனால் இந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது என மத்திய அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் என்றார் கபில்சிபல். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துஷார் மேத்தா, என் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைக்க முயற்சிக்காதீர்கள் என்றார். அப்போது, மத்திய அரசு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என விரும்புகிறோம். இது தொடர்பாக இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படும் என்றார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications