Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 10.60% குறைப்பு.. லிட்டருக்கு ரூ.8 விலை சரிவு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வாட் வரி 10.60% குறைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க கடந்த இரண்டு மாதமாக பெட்ரோல் டீசல் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இது தேசிய அளவில் மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தியது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொது மக்களும், எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து மக்கள் எதிர்ப்பு காரணமாக கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. பெட்ரோல் மீதான கலால் வரி ரூ 5, டீசல் மீதான கலால் வரி ரூ 10 மத்திய அரசு மூலம் குறைக்கப்பட்டது.

Petrol VAT decreased 8 rupees by Delhi Govt after the Union government cuts excise duty

இந்த நிலையில் தற்போது டெல்லியில் பெட்ரோல் விலை மீதான மாநில அரசின் வாட் வரி 10.60% குறைக்கப்பட்டுள்ளது. 30 சதவிகித வாட் வரி இதுவரை டெல்லியில் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 19.40% வாட் வரியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பெட்ரோல் விலை 8 ரூபாய் குறைந்துள்ளது.

தற்போது டெல்லியில் பெட்ரோல்- Rs 103.97 ஒரு லிட்டர், டீசல் - Rs 86.67 ஒரு லிட்டருக்கு விற்பனை ஆகிறது. நாளை முதல் டெல்லியில் பெட்ரோல் விலை 95.97 ரூபாய்க்கு ஒரு லிட்டர் விற்பனை ஆகும். டெல்லியில் டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

முன்னதாக அசாம், திரிபுரா, மற்றும் கோவா ஆகிய 3 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி ரூ 7 குறைக்கப்பட்டது. கர்நாடகாவில் மத்திய, மாநில அரசு வரிகள் சேர்த்து 13 ரூபாய் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Petrol VAT decreased 8 rupees by Delhi Govt after the Union government cuts excise duty

28 நாட்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் பெருநகரங்களில் பெட்ரோல் டீசல் விலை பின்வருமாறு

கொல்கத்தா:

பெட்ரோல்- Rs 104.67 per litre

டீசல் - Rs 89.79 per litre

போபால்:

பெட்ரோல்- Rs 107.23 per litre

டீசல் - Rs 90.87 per litre

ஹைதராபாத்:

பெட்ரோல்- Rs 108.20 per litre

டீசல் - Rs 94.62 per litre

சென்னை:

பெட்ரோல்- Rs 101.40 per litre

டீசல் - Rs 91.43 per litre

மும்பை:

பெட்ரோல்- Rs 109.98 per litre
டீசல் - Rs 94.14 per litre

டெல்லி:

பெட்ரோல்- Rs 103.97 per litre

டீசல் - Rs 86.67 per litre

பெங்களூர்:

பெட்ரோல்- Rs 100.58 per litre

டீசல் - Rs 85.01 per litre

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+