டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இதெல்லாம் வேற லெவல் சாதனை.. கேப்பே விடாமல் 20 வருஷம்.. வேற யாரு.. நம்ம மோடிதான்!

தன்னுடைய அரசியல் வாழ்வின் 20ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி மக்கள் சேவையில் இன்னொரு சாதனையை படைத்துள்ளார்.. அதாவது, முதலமைச்சர், பிரதமர் பதவிகளில் எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ச்சியாக மொத்தம் 19 வருஷத்தை நிறைவு செய்து.. 20 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.. இதையடுத்து நாலாபக்கமும் வாழ்த்து மழையில் பிரதமர் நனைந்து வருகிறார்.

வெகு சாமான்யனாக இருந்து.. கஷ்டப்பட்டு.. கிடைக்கிற வேலைகளை செய்து.. பிறகு அரசியலுக்குள் மெல்ல கால் பதித்தவர் பிரதமர் மோடி.. அன்றைய நிலை வேறு.. இன்றைய நிலை வேறு.. பாஜக என்ற கட்சியை இந்தியாவே சரியாக அறியாதபோது, தொண்டனாக தன்னை 34 வருஷங்களுக்கு முன்பு மோடி தன்னை இணைத்து கொண்டது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே!

PM Modi completes 20 years in office as CM and PM

1971-ல்தான் ஆர்எஸ்எஸ்-ல் அவரது பணிகள் வேகம் எடுத்தன. இம்மியளவும் தன் கொள்கையை மாற்றி கொள்ளாத போக்கினால்தான், கட்சி இவரை வாரி அணைத்து கொண்டது. ஆனால் பொறுப்புகள் வந்து சேர்ந்ததோ 1985-ல்தான்!

2001-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை என்றே சொல்லலாம். பாஜகவின் பொதுச்செயலாளர், உடனே மாநில முதல்வர் என அந்தஸ்துகளும், பதவிகளும் விறுவிறுவென உயர்ந்தன... இன்று 2-வது முறையாக நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார் என்றால், அது இவரது அரசியல் வாழ்வில் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

2001-ல் குஜராத் முதலமைச்சராக முதல்முறை மோடி பதவியேற்றார்... மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கூட, குஜராத் மாநிலத்தில் வலுவான நிலையில் ஆட்சியை செய்திருக்கிறார்.. அந்த மாநில வளர்ச்சிக்கு அளப்பறிய பங்காற்றியதாக சொல்லப்படுகிறது... அதாவது "குஜராத் மாடல் "என்று பெயர் பெறும் அளவிற்கு திட்டங்களை செயல்படுத்தி காட்டியவர்.. அதனால்தான் தேசிய அளவிலான அரசியலில் மோடிக்கு முக்கியத்துவம் அன்றே பெற்று தந்தது.

பிறகு, 2007, 2012 ஆகிய தேர்தலிலும் வெற்றி பெற்று 3 முறை முதல்வர் ஆனார்.. 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலிலும் வென்று 2-வது முறையாக பொறுப்பில் உள்ளார்.. இப்படியாக, விடாத அரசியல் சாதனையால் 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியது, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது, முத்தலாக் தடை, ஆத்மா நிர்பார் பாரத், சீனா உடனான எல்லை பிரச்சினைக்கு பொளேர் பதிலடிகள், 3 வேளாண் மசோதாக்களை சட்டமாக்கியது போன்றவை குறிப்பிடத்தகுந்த செயல்திட்டங்கள் ஆகும்! கொஞ்சம்கூட கேப் விடாமல், தொடர்ந்து 19 வருட அரசியலை நிறைவு செய்து, 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமருக்கு பாஜக தொண்டர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்!

English summary
PM Modi completes 20 years in office as CM and PM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X