மெதுவாக நடந்து வந்து.. சட்டென குனிந்து.. குப்பையை கையால் அள்ளிய பிரதமர் மோடி.. என்ன நடந்தது? வீடியோ
டெல்லி: டெல்லியில் ரூ.920 கோடி மதிப்பிலா சுரங்கபாதைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த வேளையில் சுரங்க பாதையில் கிடந்த குப்பை, தண்ணீர் பாட்டிலை பிரதமர் நரேந்திர மோடி அகற்றினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
டெல்லியில் பிரகதி மைதான் திட்டத்தின் கீழ் பிரதான சுரங்கம் மற்றும் 5 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டன. இந்த பணிகள் மத்திய அரசின் ரூ.920 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.
டெல்லியின் முதல் 1.6 கிலோமீட்டர் சுரங்கப்பாதை இதுவாகும். இதன்மூலம் மூலம் டெல்லியில் முக்கிய இடங்களில் போக்குவரத்து குறையும்.

டெல்லியில் போக்குவரத்து நெரிசல்
இந்த சுரங்கப்பாதையானது கிழக்கு டெல்லி, நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதிகளில் இருந்து இந்தியா கேட் மற்றும் பிற மத்திய டெல்லி பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகளால் ஐடிஓ, மதுரா சாலை மற்றும் பைரன்மார்க் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைக்கும். இதனால் டெல்லி மக்கள் சற்று வேகமாக பயணத்தை மேற்கொள்ள முடியும்.

திறந்து வைத்த மோடி
இந்த நிலையில் தான் இன்று பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி பிரதான சுரங்கம் மற்றும் 5 சுரங்பாதைகளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ‛‛இந்த திட்டம் கொரேனா உள்பட பல தடைகளை தாண்டி நிறைவு பெற்றுள்ளது. இந்தியாவில் பல ஆண்டுகளாக வளர்ச்சி என்பது இல்லை. வளர்ச்சி என்பது வெறும் செய்தித்தாள்களின் செய்திகளில் மட்டுமே இருந்தது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது '' என பேசினார்.

குப்பையை அகற்றிய மோடி
மேலும் சிறப்பான தீ தடுப்பு மேலாண்மை, நவீன காற்றோட்டம் மற்றும் தானியங்கி வடிகால், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை உலகத் தரத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பிரதமர் நரேந்திர மோடிசுற்றிப்பார்த்தார். அப்போது சுரங்கப்பாதையில் குப்பை, தண்ணீர் பாட்டில் கிடந்தது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கையில் எடுத்து அப்புறப்படுத்தினார். தற்போது இதுதொடர்பான வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
|
மாமல்லபுரம் கடற்கரை
முன்னதாக 2019ல் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகள் சேகரித்து அப்புறப்படுத்தினார். கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது, நாட்டின் தூய்மைக்காக தூய்மை இந்தியா திட்டத்தை அவர் தொடங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications