வாடகை வீட்டுக்காரர்களுக்கு ஹேப்பி.. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஈஸி.. பிஎம் ஆவாஸ் யோஜனா சர்ப்ரைஸ்
டெல்லி: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இதற்கான ஆணையையும் வெளியிட்டிருக்கிறார்.
கடந்த 2016ல் கொண்டுவரப்பட்டதுதான், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா எனப்படும், பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டமாகும். கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றும் வகையில், அவர்களுக்கு உறுதியான வீடுகளை கட்டி தருவதே இந்த திட்டத்தின் குறிக்கோளாகும்.

பற்றாக்குறை: மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இந்த பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.. இதன்மூலம் கிராமப்புற வீட்டுவசதி பற்றாக்குறையை தீர்ப்பதுடன், ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை ஏற்படுத்தி தரப்படுகிறது.. இந்த திட்டம் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ், வீடு கட்ட பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்துக்கு வட்டி விகிதம் குறைவு. வருமானத்திற்கு ஏற்பவும், வீட்டின் அளவை பொறுத்தும் மானிய தொகை மாறுபடும். இந்த கடனை செலுத்த 20 வருடங்கள் அவகாசமும் வழங்கப்படுகின்றன.
கிராமம் நகரம்: இந்த பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில், நகர்ப்புறம், கிராமப்புறம் என்று 2 பிரிவுகள் செயல்படுகின்றன.. 75 சதவீதம் எஸ்சி/எஸ்டி அல்லது சிறுபான்மை மக்களுக்கானது என்பது கூடுதல் விசேஷ அம்சமாகும்.. அதிலும், 10 வீடுகளில் 7 வீடுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பெண்களுக்கு சொந்தமானது என்பதை அதைவிட ஸ்பெஷலானது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை பயன்பெற வேண்டுமானால், இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு குறைவாகவும், இதற்கு முன்பாக எந்தவொரு வீடும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அதேபோல அரசுப்பணியிலும் இருக்கக்கூடாது.
வட்டி மானியம்: சமீபத்தில், வட்டி மானியம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பில் மத்திய அரசு திருத்தம் செய்திருக்கிறது. அதன்படி, 120 சதுர மீட்டர் (சுமார் 3 சென்ட் அளவு) பரப்பளவு வரையிலான வீடு கட்ட வீட்டு கடன் பெறுபவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் ஆண்டு வருமானம் ரூ.9 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். நகர்புறங்களில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் வருமான உச்சவரம்பு, பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் ஊரக பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கும் கூடுதல் தொகையுடன், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், துாய்மை பாரத இயக்கம் ஆகிய திட்டங்களை ஒருங்கிணைப்பதால், தமிழகத்தில் ஒரு வீட்டிற்கு, 2.83 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் பங்கு 1.11 லட்சம் ரூபாய்.. அதேபோல மாநில அரசின் பங்கு 1.72 லட்சம் ரூபாய்.
வீடுகள்: நடப்பாண்டு தமிழகத்தில், 68,569 வீடுகள் கட்ட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வீடுகளுக்கு மொத்தம் 836.82 கோடி ரூபாய் செலவாகும். எனவே, தற்போது முதல் கட்டமாக, மத்திய அரசு 125.52 கோடி, மாநில அரசு 83.68 கோடி என, மொத்தம் 209.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டிருக்கிறார்.
இலக்கு நிர்ணயம்: மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 2.95 கோடி நிரந்தர வீடுகளை கட்டித் தர அரசு விரும்புவதால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த தொடரப்போவதாக ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருக்கிறது.. இதற்காக 2028-29 வரை நீட்டிக்க ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.. இதன்மூலம் நாடு முழுவதும் மேலும் 2 கோடி வீடுகள் கட்ட மானியம் அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications