சான்ஸ்.. பாஜகவை தோற்கடிக்க இதுதான் ஒரே வழி.. காங்கிரஸில் இணைய மறுத்த பிரசாந்த் கிஷோர் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‛‛இந்தியாவில் மக்களவை தேர்தலில் 3வது, 4வது அணி வெற்றி பெறும் என நினைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி நாட்டின் 2வது பெரிய கட்சியாக இருக்கும் நிலையில் பாஜகவை வீழ்த்தும் சக்தி என்பது 2வது அணிக்கே உள்ளது'' என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதனால் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்ற தகவல்கள் வெளியான.

இதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை தொடர்ச்சியாக சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

காங்கிரஸில் இணைய வேண்டுகோள்

காங்கிரஸில் இணைய வேண்டுகோள்

குஜராத், சத்தீஸ்கார் மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியிடம் விளக்கி கூறினார். காங்கிரஸ் சார்பில் 2024ம் ஆண்டுக்கான செயல் திட்ட குழு உருவாக்கப்பட்டது. மேலும் பிரசாந்த கிஷோரை காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியினரும் தீவிர ஆலோசனைகள் நடத்தினர்.

 பிரசாந்த் கிஷோர் மறுப்பு

பிரசாந்த் கிஷோர் மறுப்பு

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைய மறுத்துவிட்டார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியி சார்பில் ரன்தீப் சுர்ஜேவாலா கூறினார். அதேபோல் பிரசாந்த் பிரசாந்த் கிஷோரும் தெரிவித்தார். பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பதிவில், ‛‛காங்கிரஸ் கட்சிக்கு என்னை விட தலைமையே தேவை. கட்சியின் வேரூன்றி இருக்கும் அமைப்பு ரீதியான பிரச்சினைகளை சீர்த்திருத்தம் மூலம் சரிசெய்ய கூட்டு தலைமை அவசியம். காங்கிரஸ் கட்சியில் சேரவும், தேர்தல்களுக்கு பொறுப்பேற்க கங்கிரஸ் விடுத்த கோரிக்கையை நான் ஏற்கவில்லை.'' என குறிப்பிட்டு இருந்தார்.

பேட்டி

பேட்டி

காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்த பிறகு பிரசாந்த் கிஷோர் இன்று பிபிசி செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியுடன் நடந்த விவாதம், 2024 மக்களவை தேர்தல் தொடர்பான சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பிரசாந்த் கிஷோர்கூறியதாவது:

காங்கிரஸை உயிர்பிக்கும் திட்டம்

காங்கிரஸை உயிர்பிக்கும் திட்டம்

‛‛காங்கிரஸ் கட்சியின் மறுமலர்ச்சிக்காக 600 ஸ்லைடுகள் மூலம் திட்டங்களை விளக்கி கூறினேன். எனது திட்டம் அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் புகழை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான். ஓரிரு தேர்தல்களில் வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றியது அல்ல. இந்த திட்டங்கள் நாட்டில் வலுவான அரசியல் சக்தியாக காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பிக்க உதவ வேண்டும். இதனடிப்படையில் தான் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

இந்தியாவை வெல்வது பற்றியது

இந்தியாவை வெல்வது பற்றியது

எனது ஆலோசனை, திட்டங்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடியை எப்படி தோற்கடிப்பது என்பது பற்றியது அல்ல. இந்தியாவை எப்படி வெல்வது என்பது தொடர்பானது. இரண்டுக்கும் இடையே நல்ல வேறுபாடு உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். எனது திட்டங்கள் பலவற்றை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்று கொண்டனர். அதை செயல்படுத்தும் நோக்கத்தில் விவாதங்கள் மூலம் உத்திகள் வகுக்கப்பட்டன.

2வது அணியால் மட்டுமே சாத்தியம்

2வது அணியால் மட்டுமே சாத்தியம்

இந்தியாவில் 3வது அல்லது 4வது அணிகள் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் என நம்பவில்லை. பாஜகவை முதல் அணியாக கருதினால் அதனை 2வது அணி மூலம் தான் வீழ்த்த முடியும். இதனால் பாஜகவை தோற்டிக்க விரும்புவோர் 2வது அணியாக உருவாக வேண்டும்'' என்றார். இந்த வேளையில் பாஜகவை வீழ்த்தும் 2வது அணியாக காங்கிரஸ் கட்சி உள்ளதா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛காங்கிரஸ் என்பது நாட்டின் 2வது பெரிய கட்சி'' என பதிலளித்தார்.

அரசியல் விமர்சகர்கள் பார்வை

அரசியல் விமர்சகர்கள் பார்வை

இந்த பேட்டியின் மூலம் மத்தியில் பாஜகவை தோற்கடிக்க விரும்பும் கட்சிகள் தனித்தனியே அணிகள் அமைக்காமல், ஒரே குழுவாக 2வது அணியாக கூட்டணி வைக்க வேண்டும் என்பதை தான் பிரசாந்த் கிஷோர் மறைமுகமாக கூறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் 2024ம் ஆண்டு மக்களை தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பிற மாநில கட்சிகள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை தான் பிரசாந்த் கிஷோர் விரும்புகிறார். இதுதான் இந்த பேட்டியில் எதிரொலித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

3வது அணிக்கு யார் முயற்சி

3வது அணிக்கு யார் முயற்சி

இந்தியாவில் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக பல மாநிலங்களில் பலமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து வருவதால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோர் தேசிய அளவில் கட்சிகளை இணைந்து 3வது அணியை உருவாக்க தனித்தனியே முயன்று வருகின்றனர். இந்த அணியில் காங்கிரஸ் கட்சியை அவர்கள் சேர்க்க விரும்பாத நிலையில் தான் பிரசாந்த் கிஷோர் இப்படி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+