டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியரசுத் தலைவர் உரையில் “காசி தமிழ் சங்கமம்”.. ஒற்றுமையை வெளிப்படுத்தியதாக திரௌபதி முர்மு புகழாரம்

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலமாக ஒற்றுமை ஏற்பட்டது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பாராட்டி இருக்கிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கி இருக்கிறது. லோக் சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற மைய அரங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்

அதை தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்ற மைய அரங்கில் உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இப்போது இருப்பது தைரியமான அரசு.. முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்.. ஜனாதிபதி பாராட்டுஇப்போது இருப்பது தைரியமான அரசு.. முத்தலாக் தடை, காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கம்.. ஜனாதிபதி பாராட்டு

ஏழைகளுக்கு உதவி

ஏழைகளுக்கு உதவி

இதில் பேசிய குடியரசுத் தலைவர், "ஊழலை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 11 கோடி மக்களுக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் காரணமாக குடிநீர் இணைப்பு வசதி கிடைத்து உள்ளது. ஏழைகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர், மின் இணைப்பு, குடிநீர், இருப்பிடத்தை வழங்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா உதவி

கொரோனா உதவி

உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் கொரோனா காலத்தில் பல்வேறு துயரங்களை சந்தித்தார்கள். ஆனால், இந்திய அரசு ஏழைகளை காக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எந்த ஏழையும் பசியோடு உறங்கக்கூடாது என்று பல முயற்சிகளை மேற்கொண்டது. கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் உணவை தடையின்றி பெற்று வருகிறார்கள்.

 இந்திய பாதுகாப்பு

இந்திய பாதுகாப்பு

சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதலின் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான எதிர்வினையை இந்தியா கொடுத்தது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் வலுவான தாக்குதலை நடத்தியது. 2047 ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் கடந்த கால பெருமைகளுடன் நவீன கால சிறந்த தருணங்களுடன் இணைக்கப்படும். அம்ரித் காலின் 25 ஆண்டுகாலம் என்பது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கானது.

சுய கட்டமைப்பு

சுய கட்டமைப்பு

இந்திய சுயமாக கட்டமைத்துக் கொள்ளும் தருணம் இது. இன்று ஒவ்வொரு இந்தியனும் அதிகளவிலான தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். நம்ப முடியாத அளவிற்கு நம் மீதான உலகின் பார்வை மாறி இருக்கிறது. இந்தியா மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிறந்த நிலையில் இருக்கிறது. தனது பிரச்சனைகளை தீர்க்க இந்தியா மற்ற நாடுகளை இனி சார்ந்து இருக்காது.

வெளிநாடுகளுக்கு உதவி

வெளிநாடுகளுக்கு உதவி

அரசியல் நிலையற்ற தன்மையால் பல நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்தியாவில் அதுபோன்ற நிலை இல்லை. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை நாடுகின்றன. பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா எடுக்க கடினமான முடிவுகளை உலக நாடுகள் புரிந்துகொண்டு உள்ளன.

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம்

யாத்திரை செல்லும் தளங்களை இந்திய அரசு மேம்படுத்தி வருகிறது. ஒருபக்கம் இந்தியாவில் இருக்கு ஆன்மீக யாத்திரை தளங்களை மேம்படுத்தி வரும் அதே நேரம், வரலாற்றி சிறப்பு மிக்க தளங்களை மேம்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

English summary
President Draupadi Murmu has praised the unity brought by the Kashi Tamil Sangamam event held in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X