டெல்லி வந்த ஐநா சபைத் தலைவர் அப்துல்லா ஷாஹித்.. துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கருடன் சந்திப்பு!
டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வெளியுறவு அமைச்சக செயலாளர்கள் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் வேலை நிமித்தமாக ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் இந்தியாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக ஐநா செய்தித்தொடர்பாளர்களால் அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அப்துல்லா ஷாஹித் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கஜகஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், விமானம் வாயிலாக நேரடியாக டெல்லி விமான நிலையம் வந்தார்.
தொடர்ந்து ஐநா சபைத் தலைவர் அப்துல்லா ஷாஹித்தை மத்திய வெளியுறவுத்துறையைச் சேர்ந்த செயலாளர்களான பிரகாஷ் குப்தா மற்றும் கார்த்திக் பாண்டே ஆகியோர் நேரில் சென்று வரவேற்றுள்ளனர்.

ஐநா தலைவர் அப்துல்லா
இந்த சுற்றுப்பயணத்தின் போது ஐநா பொதுசபைத் தலைவர் அப்துல்லா ஷாஹித் சில மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதேபோல் ஐக்கிய நாடுகள் அமைப்பில் நடந்து வரும் பிரச்சினைகள் மற்றும் உலக அமைப்புகளுடனான நாட்டின் உறவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படவுள்ளது.

ஜெக்தீப் தன்கருடன் சந்திப்பு
இந்தியா வந்துள்ள ஐநா பொதுசபைத் தலைவர் அப்துல்லா ஷாஹித் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை சந்திப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைப்பாளர் ஷோம்பி ஷார்ப்பையும் சந்திக்க உள்ளார். துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கருடனான சந்திப்பின் போது சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய முடிவு?
அதேபோல் வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உடனான சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் ஐநாவின் செயல்பாடுகளுக்கு இந்தியாவின் ஆதரவை கோருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பதவிக்காலம்
இந்தப் பயணத்தின் போது அப்துல்லா ஷாஹித் தனது அலுவலகத்தில் இருந்து மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் பயணம் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications