சும்மா சும்மா அபாய சங்கிலியை இழுக்காதீங்க! பைலட் வீரச்செயலை காட்டி ரயில்வே அமைச்சகம் வேண்டுகோள்
டெல்லி: ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலியை இழுக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் நிலையில் அதனால் ஏற்படும் சிரமங்கள் தொடர்பான வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. இதில் மீண்டும் ரயிலை இயக்க ஆற்று பாலத்தில் உயிரை பணயம் வைத்து லோகோ பைலட் ஒருவர் அபாய சங்கிலிக்கான லாக்கை விடுவிக்கிறார்.
Recommended Video
ரயில் பயணத்தின்போது பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் அபாய சங்கிலி உள்ளது. அவசர காலத்தில் பயணிகள் இதை இழுத்தால் எச்சரிக்கையை உணர்ந்து பைலட் ரயிலை நிறுத்துவார்.
மேலும் சம்பந்தப்பட்ட பயணிக்கு தேவையான அவசர உதவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்தகைய இந்த வசதியை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.

தேவையின்றி இழுக்கப்படும் சங்கிலிகள்
அதாவது பல சமயங்களில் இந்த அபாய சங்கிலிகள் தேவையின்றி இழுக்கப்படுகிறது. இவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பயணிகள், பைலட்டுகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ரயில்வே அமைச்சகம் வீடியோ
இந்நிலையில் தான் ரயில்வே அமைச்சகம் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது சும்மா சும்மா ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து பொதுமக்கள் இழுக்கக்கூடாது. இதனால் ஏற்படும் சிரமத்தை விளக்கும் வகையில் ஒரு வீடியோவை ரயில்வே அமைச்சகம் பதிவிட்டுள்ளது.

வீடியோவில் இருப்பது என்ன?
அந்த வீடியோவில் ஆற்றின் பாலத்தின் மீது சென்றபோது அபாயசங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நடுபாலத்தில் நிற்கிறது. அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ஏற்பட்ட லாக்கை விடுவித்தால் மட்டுமே ரயில் செல்ல முடியும். இதனால் பைலட் ரயிலின் சக்கரங்களுக்கு இடையே சிரமப்பட்டு நுழைந்து லாக்கை விடுவித்து வருகிறார். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் உள்ள நிலையில் உயிரை பணயம் வைத்து அந்த பைலட் இந்த செயலை வெற்றிகரமாக முடிக்கிறார்.

தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள்
மேலும் இந்த வீடியோ பதிவில் ரயில்வே அமைச்சகம், ‛‛ரயிலில் உள்ள அபாய சங்கிலியை தேவையின்றி இழுப்பது பல பேருக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். மும்பை அருகே திட்வாலா-கடாவளி ரயில் நிலையங்களுக்கு இடையேயான ஆற்று பாலத்தின் மேல் தேவையின்றி அபாயசங்கிலி இழுக்கப்பட்டது. நின்ற ரயிலை மீண்டும் இயக்க உதவிய லோகோ பைலட் சதீஷ்குமார் ஆபத்தான முறையில் அபாய சங்கிலி லாக்கை விடுவிக்கிறார். பொதுமக்களே அபாயசங்கிலியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துங்கள்'' என கூறியுள்ளது. இந்த சம்பவமானது நேற்று மும்பையில் இருந்து பீகார் மாநிலம் சப்ரா நோக்கி சென்ற கோடான் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications