இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: ராஜீவ்குமார் இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஜார்கண்டை சேர்ந்த 1984ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார், மத்திய நிதித்துறை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதிச்சேவை செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி பிறந்த ராஜீவ் குமார் 1984 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 38 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ள ராஜீவ் குமார் மத்தியிலும், பீகார்/ஜார்கண்ட் மாநிலத்திலும் பல்வேறு அமைச்சகங்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, அசோக் லவாசா இடத்துக்கு புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமாரை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள சுஷீல் சந்திராவின் பதவிக்காலம் வரும் 14ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து மே 15ஆம் தேதியன்று ராஜீவ் குமார் இந்தியாவின் 25வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications