பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவே முடியாது: உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் வாதம்
டெல்லி: வறுமை என்பது ஒரு பிரிவினருக்கு மட்டுமே உரியது அல்ல; பொருளாதார அடிப்படையில் யாருக்கும் இடஒதுக்கீடு வழங்கவே முடியாது என உச்சநீதிமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் வாதிட்டார்.

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு 10% இடஒதுக்கீடு வழங்கியது. இது 2019-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்காக அரசியல் சாசனத்தின் 103-வது பிரிவில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
மத்திய பாஜக அரசின் இந்த 10% இடஒதுக்கீடுக்கு நாட்டின் பல மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் 50%-க்கு அதிகமாக இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என வரையறை செய்துள்ளது. ஆனால் 10% இடஒதுக்கீடானது அந்த வரம்பை மீறுவதாக உள்ளது.
இதனால் மத்திய அரசின் 10% இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட பொதுநலன் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழகத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளும் இந்த வழக்கை தொடர்ந்தன. இவ்வழக்குகளை தலைமை நீதிபதி யுயு லலித் தலைமையில் நீதிபதிகள் ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி.பர்திவாலா, பெல்லா த்ரிவேதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன் பெஞ்ச் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் நேற்று இறுதி விசாரணைகள் நடைபெற்றன. உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசியல் சாசன பெஞ்ச் விசாரணைகள் நேற்று முதல் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த இறுதி விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவ்வழக்கில் திமுக எம்.பி. வில்சன் முன்வைத்த வாதத்தின் முக்கிய அம்சங்கள்: முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான 10% இட ஒதுக்கீடு என்பது அசாதாரண சூழலில் கொண்டுவரப்பட்டுள்ளது என்கிறது மத்திய அரசு. இதை எப்படி ஏற்க முடியும்? வறுமை என்பது அனைவருக்கும் சமமானது. ஒரு வகுப்பினருக்கு மட்டும் வறுமையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது எப்படி அசாதரணமான சூழலாகும்?
வகுப்பு வாரி பிரதிநிதித்துவத்தை கணக்கில் கொள்ளாமல் இடஒதுக்கீடு வழங்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஒரு குறிப்பிட்ட வகுப்பாக எப்படி வகைப்படுத்த முடியும்? இதனை இந்திரா சஹானி தீர்ப்பு சுட்டிக்காட்டி இருக்கிறது. இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டதும் கிடையாது. இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை மேம்படுத்துவதற்கான ஏற்பாடு.
தமிழ்நாடு பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இன்னமும் முழுமையாக மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவே இல்லை. அவர்களுக்கு மத்திய அரசு பணிகள் கிடைப்பதும் இல்லை. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு என்பது இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட- பழங்குடியினர் சமூகங்களை அரசியல் சாசனம் உருவாகிய காலத்துக்கு முந்தைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது. அத்துடன் முன்னேறிய வகுப்பினரில் 31.2% பேர் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக மத்திய அரசு தரப்பு முன்வைத்துள்ள வாதம் ஏற்கக் கூடியது அல்ல. இவ்வாறு வில்சன் எம்.பி. வாதிட்டார். ஆனால் மத்திய அரசு தரப்போ, 10% இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் இதர இடஒதுக்கீடுகளுக்கு பாதிப்பு இல்லை என வாதிட்டது. இவ்வழக்கில் இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications