50 ரூபாய் பொம்மை துப்பாக்கி... அடித்ததோ ரூ.50 லட்சம் நகைகள்.. பொறியியல் பட்டதாரி கைவரிசை
டெல்லி: திரைப்பட பாணியில் வெறும் 50 ரூபாய் பொம்மை துப்பாக்கியை வைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்த பொறியியல் பட்டதாரி இளைஞரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லி அசோக் விஹார் பகுதியில் பெரிய நகைக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடை திறக்கப்பட்டது. பின்னர் ஊழியர்கள் நகைகளை வெளியே எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு முகமூடியுடன் நுழைந்த ஒருவர், நகைக் கடை உரிமையாளர் அனுராஹ் குமாரின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதனால் பயந்து போன அனுராஹ் குமார், தன்னை சுட்டுவிடாதீர்கள் என கெஞ்சியுள்ளார். அதையடுத்து அந்தக் கொள்ளையன், "நீ உயிருடன் இருக்க வேண்டுமானால் நான் கூறும் நகைகளை எடுத்து தா" என கூறியுள்ளான்.

அதற்கு சம்மதம் தெரிவித்த உரிமையாளர் அனுராஹ், கொள்ளையன் கூறிய 10-க்கும் மேற்பட்ட பெரிய தங்க நெக்லஸ்களை எடுத்துக் கொடுத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. அந்த நகைகளை தான் கொண்டு வந்த பையில் போட்டுக் கொண்ட கொள்ளையன் அங்கிருந்து தப்பியோடினான்.
இதனைத் தொடர்ந்து நகைக் கடை உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் கடை மற்றும் தெருவில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையன் முகமூடி அணிந்திருந்ததாலும், போக்குவரத்து அதிகம் இருந்ததாலும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், கொள்ளையன் ஒரு ஆட்டோவில் ஏறிச் செல்வது மட்டும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையனை அழைத்துச் சென்ற ஆட்டோவை போலீஸார் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த நபர் எங்கு இறங்கினார் என்பதை கண்டுபிடித்த போலீஸார், அரை மணிநேரத்திலேயே கொள்ளையனை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ரிங்கு ஜிண்டால் என்பதும், பொறியியல் பட்டதாதி என்பதும் தெரியவந்தது. மேலும், ஆன்லைன் ரம்மியில் 1 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்ததால் மீண்டும் விளையாடுவதற்காக நகைக் கடையில் கொள்ளை அடித்ததாகவும் அவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார். அதுமட்டுமல்லாமல், 50 ரூபாய் பொம்மை துப்பாக்கியை வாங்கி கொள்ளையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, வீட்டில் அவர் மறைத்து வைத்திருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான நகைகள், பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications