டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை கட்டணம் 9 மடங்கு உயர்வு.. பயணிகள் குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதையும் கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தி வரும் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த புதிய வகை உருமாறிய கொரோனா ஓமிக்ரான் என்று அழைக்கப்படுகிறது. இந்த உருமாறிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை 9,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 125 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை

 ஆர்.டி.பி.சி ஆர் சோதனை

ஆர்.டி.பி.சி ஆர் சோதனை

ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் இந்தியாவும் மிகவும் எச்ச்ரிக்கையாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளிடம் இருந்து வருபவர்களை விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதிக்கும்படி மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் கட்டாயம் ஆர்.டி.பி.சி ஆர் சோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவு

மத்திய அரசின் உத்தரவு

தென்னாப்பிரிக்கா போன்ற ஓமிக்ரான் வைரஸ் ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகு RT-PCR சோதனைக்கான மாதிரிகளை கொடுக்க வேண்டும். பாசிட்டிவ் கண்டறியப்பட்ட எவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டாரா என்பதை அறிய மரபணு சோதனைக்கு அனுப்பப்படும். ஓமிக்ரான் பாதிப்பு இருந்தால் மிக கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் இருக்கும். மரபணு சோதனையில் ஓமிக்ரான் பாதிப்பு இல்லை என்று தெரியவந்தாலும் ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது.

9 மடங்கு அதிக கட்டணம்

9 மடங்கு அதிக கட்டணம்

மத்திய அரசின் உத்தரவால் டெல்லி, மும்பை, பெங்களுரு உள்பட நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் RT-PCR சோதனை செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் அவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. வழக்கமாக RT-PCR சோதனை ரூ.500-க்கு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பல விமான நிலையங்ககளில் 9 மடங்கு அதிகமாக அதாவது ரூ.4,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
     பெங்களூரு, டெல்லி

    பெங்களூரு, டெல்லி

    பெங்களூரு விமான நிலையத்தில் ரூ3,000, டெல்லி விமான நிலையத்தில் ரூ.3,900 மற்றும் மும்பை விமான நிலையத்தில் ரூ.4,500 என பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி கூடுதல் பணம் கொடுப்பவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் RT-PCR சர்டிபிகெட் கொடுக்கப்படுகிறது என்றும் நிர்ணையிக்கப்பட்ட கட்டணம் கொடுக்கும் மற்றவர்களுக்கு RT-PCR சோதனை செய்ய ஆறு மணி நேரத்துக்கும் மேலாவதாக புகார்கள் வருகின்றன.

    English summary
    It is said that the RT-PCR test, which was usually done at Rs.500 at many airports, is now 9 times more expensive at Rs.4,500. It is said that those who pay extra like this are given an RT-PCR certificate within an hour
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X